by Vignesh Perumal on | 2026-03-24 02:55 PM
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக இளைஞரணியை வலுப்படுத்தும் நோக்கில், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கும் மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம் இன்று திண்டுக்கல்லில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.
திமுக இளைஞரணிச் செயலாளரும், தமிழக துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி உரையாற்றி வருகிறார். 2026 தேர்தலுக்கான களப்பணிகள், வாக்குச் சாவடி வாரியாக இளைஞரணியினரை ஒருங்கிணைத்தல் மற்றும் அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்தல் ஆகிய முக்கிய அம்சங்கள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில்:
திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள்.
ஒன்றிய, நகர, பகுதி மற்றும் பேரூர் கழக அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள். மாவட்டச் செயலாளர்கள் (திண்டுக்கல் - ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி மற்றும் தேனி - என்.ராமகிருஷ்ணன்) மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய முக்கிய அம்சங்கள், சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றியை உறுதி செய்ய இளைஞரணியினர் தற்போதிலிருந்தே களப்பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும். இளைஞரணியில் அதிகப்படியான புதிய உறுப்பினர்களைச் சேர்க்கவும், அவர்களைச் சமூக வலைதளங்கள் மூலம் ஒருங்கிணைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு செய்துள்ள மக்கள் நலத்திட்டங்களை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு செல்ல வேண்டும்.
முன்னதாக, இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கரூரிலிருந்து திண்டுக்கல்லுக்குக் கார் மூலம் வந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் காரைத் தேர்தல் பறக்கும் படையினர் வேடசந்தூர் அருகே உள்ள கல்வார்பட்டி சோதனைச் சாவடியில் மறித்துச் சோதனை செய்தனர். இந்தச் சோதனையில் எதுவும் சிக்காத நிலையில், அவரது கார் பின்னர் அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து, தென் மாவட்டங்களில் அடுத்தடுத்த ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !