| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

பறக்கும் படை அதிரடி...! காரில் கொண்டு சென்ற ரூ.1,00,900 பறிமுதல்...!

by Vignesh Perumal on | 2026-03-24 02:19 PM

Share:


பறக்கும் படை அதிரடி...! காரில் கொண்டு சென்ற ரூ.1,00,900 பறிமுதல்...!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுத் திண்டுக்கல் பழனி பைபாஸ் பகுதியில், உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1,00,900 ரொக்கப் பணத்தைத் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகிப்பதைத் தடுக்கத் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் 24 மணி நேரமும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, இன்று திண்டுக்கல் பழனி பைபாஸ் பகுதியில் பறக்கும் படைத் தலைவர் தாஜ்தீன் தலைமையிலான அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்றை அதிகாரிகள் மறித்துச் சோதனை செய்தனர். அந்த காரில் வந்த திண்டுக்கல்லை அடுத்த மாங்கரை, நடுப்பட்டி பகுதியைச் சேர்ந்த நல்லகாமு என்பவரது மகன் சபரிகாமன் என்பவரிடம் சோதனை நடத்தியபோது, அவர் உரிய ஆவணங்களின்றி ரூ.1,00,900 ரொக்கப் பணத்தைக் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. 

தேர்தல் விதிமுறைப்படி உரிய ஆதாரமின்றி ரூ.50,000-க்கு மேல் பணம் கொண்டு செல்ல அனுமதி இல்லை என்பதால், அந்தப் பணத்தைத் தேர்தல் பறக்கும் படையினர் முறைப்படி பறிமுதல் செய்தனர்.


பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை அதிகாரிகள் திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்குக் கொண்டு சென்றனர். அங்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுல்தான் சிக்கந்தர் மற்றும் துணை வட்டாட்சியர் பிரேம்குமார் ஆகியோரிடம் அந்தப் பணம் ஒப்படைக்கப்பட்டது. 

அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்ட அந்தப் பணம், உடனடியாக அரசுப் பாதுகாப்புடன் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு உரிய ஆதாரங்கள் மற்றும் வங்கி ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் பட்சத்தில், முறையான விசாரணைக்குப் பிறகு பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.










நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள் 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment