by satheesh on | 2026-03-21 11:25 PM
தேனி : பெரியகுளம் நகராட்சி 14வது வார்டு கவுன்சிலராக சுதா என்பவர் இருந்து வருகிறார். இவரது கணவர் நாகலிங்கம் என்பவர் பெரியகுளம் திமுக நகர துணை அமைப்பாளராக இருந்து வருகிறார். இவர் வரும் சட்டசபை தேர்தலில் பெரியகுளம் (தனி) தொகுதியில் போட்டியிட விருப்பமனு கொடுத்துள்ளார்.
இதைத் தெரிந்து கொண்ட பெரியகுளம் நகர திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளரான கார்த்தி மற்றும் அவரது கூட்டாளிகளாகிய ஆஷிக் ராஜா மற்றும் அபுதாஹிர் நாகலிங்கத்தின் அலைபேசிக்கு சென்னை அறிவாலயத்திலிருந்து பேசுவது போல் சிலரை பேச வைத்து பெரியகுளம் தொகுதியில் போட்டியிட எம் எல் ஏ சீட் பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறி நம்ப வைத்துள்ளனர். இதனை நம்பிய நாகலிங்கம் தனக்கு எம்எல்ஏ சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர்களிடம் மூன்று கோடி பேரும் பேசி உள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்திய அந்த மூவரும் நாகலிங்கத்திடம் முன்பணமாக 1.30 கோடி ரூபாயை ஆசிக் ராஜா அறிவுறுத்தலின்படி, அபுதாஹீரிடம் பணத்தைக் கொடுத்ததாகவும், அவர் அதனை கார்த்திக்கிடம் கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன் திமுக தலைமை நடத்திய நேர்காணனுக்கு தன்னை அழைக்காததால் சந்தேகம் அடைந்த நாகலிங்கம் பணத்தை கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் சரிவர பதில் கூறாததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து பெரியகுளம் தென்கரை போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய தென்கரை போலீசார் ஆஷிக் ராஜா மற்றும் கார்த்திகை கைது செய்து ரூபாய் 84 லட்சத்தை ஆஷிக் ராஜாவிடமிருந்து பறிமுதல் செய்தனர். இதில் சம்பந்தப்பட்ட அபுதாஹிர் மட்டும் தலைமறைவாகிவிட்டார். போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
அபுதாகிர் ஓ பன்னீர்செல்வத்தின் நெருங்கிய நண்பர் என்பதும் அவர் சமீபத்தில் தான் பன்னீர்செல்வத்துடன் திமுகவில் இணைந்தார் என்பதும், கார்த்தி என்பவர் முன்னாள் எம்பி ரவீந்திரநாத்துக்கு நெருக்கமானவர் என்பதும் அவரும் சில நாட்களுக்கு முன்னர்தான் திமுகவில் இணைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. திமுக தலைவர் ஸ்டாலின் எம்எல்ஏ சீட்டு வேண்டி யாரையும் அணுக வேண்டாம் என்றும் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் அறிவுறுத்தி இருந்தார். இச்சம்பவம் பெரியகுளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !