by Vignesh Perumal on | 2026-03-21 10:28 PM
திண்டுக்கல் நகர் பகுதியில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த மூன்று பேரை நகர் மேற்கு மற்றும் தெற்கு காவல் நிலைய போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மொத்தம் 225 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதாலும், தேர்தல் நேரத்தில் மது விநியோகத்தைக் கட்டுப்படுத்தவும் திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தீவிரக் கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, திண்டுக்கல் நகர் துணைக்காவல் கண்காணிப்பாளர் (DSP) கார்த்திக் உத்தரவின் பேரில் தனிப்படையினர் மற்றும் அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் மீனாட்சி மற்றும் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் லிங்கபாண்டியன் ஆகியோர் தலைமையிலான போலீசார் இன்று திண்டுக்கல் நகரின் முக்கியப் பகுதிகளில் அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர்.
இந்தச் சோதனையில், அரசு அனுமதியின்றி மறைமுகமாக மது விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேர் பிடிபட்டனர். குறிப்பாக, ஆரோக்கியசாமி - மின் மயானம் அருகே மது விற்றபோது கைது செய்யப்பட்டார். மதியழகன்- முருகபவனம் பகுதியில் மது விற்றபோது பிடிபட்டார். செந்தில்குமார் - மேட்டுப்பட்டி சந்தைப்பேட்டை பகுதியில் சட்டவிரோத விற்பனையில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட இந்த மூவரிடமிருந்தும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மொத்தம் 225 மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் மீது அந்தந்த காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன? இதன் பின்னணியில் உள்ள மொத்த வியாபாரிகள் யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நகரின் மூன்று வெவ்வேறு முக்கியப் பகுதிகளில் ஒரே நாளில் நடத்தப்பட்ட இந்தத் துரித நடவடிக்கை சமூக விரோத கும்பலிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !