by Vignesh Perumal on | 2026-03-21 07:40 PM
நாகர்கோவில் டவர் சந்திப்பு பகுதியில் சாலையில் மயங்கி விழுந்த முதியவர் ஒருவருக்கு, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் நேரில் முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நெகிழ்ச்சியான சம்பவம் இன்று அரங்கேறியுள்ளது.
இன்று (21.03.2026) மதியம் சுமார் 2.30 மணியளவில், நாகர்கோவில் நகரின் பரபரப்பான பகுதியான டவர் சந்திப்பு அருகே சுமார் 75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வெயிலின் தாக்கம் காரணமாகவோ அல்லது உடல்நலக்குறைவு காரணமாகவோ அவர் திடீரென நிலைதடுமாறி சாலையில் மயங்கி விழுந்தார்.
அந்தச் சமயத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் அவர்கள் தனது வாகனத்தில் அந்த வழியாகப் பணி நிமித்தமாகச் சென்று கொண்டிருந்தார். சாலையில் முதியவர் விழுந்து கிடப்பதைக் கண்ட அவர், உடனடியாகத் தனது வாகனத்தை நிறுத்தச் சொல்லி கீழே இறங்கினார்.
காவல் துறையின் உயர் அதிகாரி என்ற பாரபட்சம் இன்றி, உடனடியாக அந்த முதியவரின் அருகே சென்று அவருக்கு முதலுதவி சிகிச்சைகளை மேற்கொண்டார். பின்னர், அங்கிருந்தவர்களின் உதவியுடன் அந்த முதியவரை மீட்டு, சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.
எஸ்.பி. ஸ்டாலின் அவர்கள் ஒரு மருத்துவர் என்பதால், இக்கட்டான அந்தச் சூழலில் முதியவருக்குத் தேவையான முறையான முதலுதவி சிகிச்சையைத் துரிதமாக வழங்க முடிந்தது. முதியவர் பாதுகாப்பாக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதை உறுதி செய்த பின்னரே, அவர் அங்கிருந்து தனது அலுவலகத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்.
உயர் பதவியில் இருந்தாலும், ஆபத்தான நேரத்தில் ஒரு சாமானிய மனிதனாக இறங்கி வந்து முதியவருக்கு உதவிய எஸ்.பி. டாக்டர் ஸ்டாலின் அவர்களின் செயலைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவரை வெகுவாகப் பாராட்டினர்.
"மக்களோடு மக்களாக நின்று உதவும் இதுபோன்ற அதிகாரிகளே காவல்துறைக்குக் பெருமை சேர்க்கின்றனர்" எனச் சமூக வலைதளங்களிலும் அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
தூத்துக்குடி சம்பவம் - போலீசாரை பாராட்டிய டி ஐ ஜி !
மயங்கி விழுந்த முதியவருக்கு முதலுதவி செய்த எஸ்.பி. ஸ்டாலின்...! குவியும் பாராட்டுக்கள்...!
திண்டுக்கல் கலெக்டர் சரவணன் அதிரடி ஆய்வு...! மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்...!
ஒட்டன்சத்திரம் அருகே பரபரப்பு...! ரூ.10 லட்சம் பறிமுதல்...!
உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.93,350 பறிமுதல்...!