by satheesh on | 2026-03-19 09:14 AM
உளவுத்துறைக்கே செக்? திமுகவுக்கு நெருக்கமான IPS அதிகாரிகளின் மாற்றம்? டெல்லி போடும் கடிவாளம் !
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துவிட்டன. இந்த நிலையில் அனைத்துக் கட்சிகளுடன் தேர்தல் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக். தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடப்பதையும், ஆளும் கட்சிகள் தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்யாமல் இருப்பதையும் உறுதி செய்ய தேர்தல் ஆணையம் வகுத்துள்ள கட்டுப்பாடுகளே இந்த MCC. இனி மேல் முதலமைச்சரோ அல்லது அமைச்சர்களோ எந்த ஒரு புதிய திட்டத்தையும் அறிவிக்க முடியாது. அடிக்கல் நாட்டு விழா, புதிய சாலைத் திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என எதுவுமே இனி 'நோ நோ' தான். அரசு வாகனங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் அரசு அலுவலகங்களைத் தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தக் கூடாது. அமைச்சர்கள் தங்கள் அதிகாரப்பூர்வ பயணத்துடன் தேர்தல் பணிகளை இணைக்கக் கூடாது. அரசு செலவில் சாதனைகளை விளக்கிச் செய்தித்தாள்கள் அல்லது தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்யத் தடை விதிக்கப்படும். ஏற்கனவே உள்ள அரசு விளம்பரங்கள், பேனர்கள் உடனடியாக அகற்றப்படும்.
தமிழக தேர்தல் - கட்சிகளுடன் ஆலோசனை :
இந்த நிலையில் அனைத்துக் கட்சிகளுடன் தேர்தல் தொடர்பாக தலைமைச் செயலக த்தில் ஆலோசனை நடத்தினார் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய அர்ச்சனா பட்நாயக், ''தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. விதிகளை மதித்து எல்லோரும் நடக்கணும். தேர்தல் ஆணையத்துக்கு ஒத்துழைப்புக் கொடுங்கள். ஒவ்வொரு கட்சியிலும் நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை சீக்கிரம் பதிவு செய்யுங்கள்'' என்றெல்லாம் பல விசயங்களை பகிர்ந்து கொண்டார்.:ஒவ்வொரு கட்சியின் பிரதிநிதிகளும் தங்களின் கோரிக்கையை முன்னிறுத்திப் பேசினர். பாஜக சார்பில் கலந்துகொண்ட அக்கட்சியின் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் பேசும்போது, திமுகவுக்கு செக் வைக்கும் வகையில் ஒரு விசயத்தை கையிலெடுத்துப் பேசினார். அவர் பேசும்போது, ''திமுகவுக்கு அச்சாணி மாதிரி அதிகாரத்தில் இருக்கும் காவல் துறை அதிகாரிகளை இன்னும் நீங்கள் மாத்தலை. குறிப்பாக, உளவுத்துறை ஐ.ஜி. (செந்தில்வேலன்) அவர்கள், உளவுத்துறையின் ஏ.டி.ஜி.பி. பதவியும் கூடுதல் பொறுப்பாக (இன்சார்ஜ்) கவனித்து வந்தார். தற்போது, உளவுத்துறையின் ஏ.டி.ஜி.பி. பதவியை டிஜிபியாக அப்கிரேட் செய்து, உளவுத்துறையின் டிஜிபியாக நியமித்துள்ளனர். ஆனால், உளவுத்துறையின் ஐ.ஜி.மாற்றப் பட வில்லை. டிஜிபி நியமிக்கப்பட்டாலும் இன்னும் அதிகாரம் முழுக்க ஐ.ஜி.யிடம் தான் இருக்கிறது. அவரது மாற்றம் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை'' என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.
உளவுத்துறை மாற்றம்:
கராத்தே தியாகராஜனின் பேச்சு, ஆலோசனைக் கூட்டத்தில் உற்று கவனிக்கப்பட்டிருக்கிறது. திமுகவின் அதிகாரமிக்க அதிகாரிகளில் உளவுத்துறை ஐ.ஜி. செந்தில் வேலனும் ஒருவர். அவரை மாற்ற வேண்டும் என்கிற தொணியில் பேசி திமுகவுக்கு கராத்தே தியாகராஜன் செக் வைத்த நிலையில், திமுக சார்பில் கூட்டத்தில் கலந்து கொண்ட ஆர்.எஸ்.பாரதி, வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் யாரும் பதில் பேசவில்லையாம். கராத்தே தியாகராஜன் சுட்டிக்காட்டியது உட்பட ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்திய அனைத்து விசயங்களையும் குறிப்பு எடுத்து கொண்ட அர்ச்சனா பட்நாயக், ''டெல்லியிலுள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு இவைகளை எடுத்துச் சொல்கிறேன். அவர்களின் ஆலோசனைகளுக்குப் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் '' என்று சொல்லியிருக்கிறார். இந்த சூழலில், தமிழகத்தில் உயர் பொறுப்புகளில் இருக்கும், திமுகவுக்கு நெருக்கமான ஐ.பி.எஸ். அதிகாரிகளின் மாற்றம் விரைவில் இருக்கும் என்கிறது தேர்தல் ஆணைய வட்டாரம். இதற்கிடையே, ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது போல, திமுக ஆதரவு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 10 பேரை மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை கடிதமும் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.
இணை ஆசிரியர் : zN.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
திமுகவிற்கு நெருக்கமான அதிகாரிகள்? உளவுத்துறைக்கு செக் ! அட்டாக் செய்யும் டெல்லி !!
சொத்துக்களை விற்கும் விஜய் ! அவசரம் காட்டுவது ஏன் ? பின்னணி என்ன.?
கூட்டணிக்குள் விஜய் - பாஜக பகீதர முயற்சி ! திமுகவிற்கு செக் !! பிடி கொடுக்காத எடப்பாடி !!!
எரிந்து காரில் சடலங்கள் அதிர்ச்சி ! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சோகம் !!
பெண் VAO கையும் களவுமாகப் பிடிபட்டு கைது...!