by Vignesh Perumal on | 2026-03-12 04:54 PM
தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராகக் கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று (மார்ச் 12, 2026) முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். அவருக்குச் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று காலை எளிய முறையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி, மேற்கு வங்க மாநில ஆளுநராக மாற்றப்பட்டதையடுத்து, கேரள ஆளுநராகப் பணியாற்றி வரும் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழகத்தின் கூடுதல் பொறுப்பு ஆளுநராகக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டார்.
பதவியேற்பு விழாவில், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, ராஜேந்திர அர்லேகருக்குப் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். முன்னதாக, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் என். முருகானந்தம், ஆளுநர் நியமனம் குறித்த குடியரசுத் தலைவரின் உத்தரவை வாசித்தார்.
இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சபாநாயகர் எம். அப்பாவு மற்றும் அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ. வேலு, ரகுபதி, மா. சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள், அரசு உயர் அதிகாரிகள் பலரும் பங்கேற்றுப் புதிய ஆளுநருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
தமிழக ஆளுநராகச் சுமார் 54 மாதங்கள் பணியாற்றிய ஆர்.என். ரவி, நேற்று முறைப்படி விடைபெற்று மேற்கு வங்கத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். புதிய ஆளுநர் நியமிக்கப்படும் வரை, ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழக ஆளுநர் பொறுப்பைத் தொடர்ந்து கவனிப்பார். இவர் ஏற்கனவே இமாச்சலப் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களின் ஆளுநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!