by Vignesh Perumal on | 2026-03-11 08:57 PM
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்பட்டி கைலாசநாதர் - செண்பகவல்லி தாயார் கோயிலில், மாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்குச் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி அன்று கால பைரவரை வழிபட உகந்த நாளாகக் கருதப்படுகிறது. அதன்படி, மாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, இக்கோயிலில் தனிச் சன்னதி கொண்டு அருள்பாலிக்கும் கால பைரவருக்குச் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
இளநீர், சந்தனம், ஜவ்வாது, மஞ்சள், தேன், பால், தயிர் என 16 வகையான வாசனைப் பொருட்களைக் கொண்டு சுவாமிக்குத் திவ்ய அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், பைரவருக்குப் பிடித்தமான மிளகு தீபம் ஏற்றி சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
அபிஷேகத்தைத் தொடர்ந்து, கால பைரவருக்குப் பல்வேறு வகையான மலர்களைக் கொண்டு கண்கவர் அலங்காரம் செய்யப்பட்டது. குறிப்பாக மல்லிகை, ரோஜா, முல்லை, அரளி, செம்பருத்தி. செவ்வரளி, தாமரை, கனகாம்பரம், சாமந்திப்பூ, செவ்வந்திப்பூ. தாழம்பூ, வாடாமல்லி, ஜாதிமல்லி உள்ளிட்ட பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
முன்னதாக, மூலவர் கைலாசநாதர் மற்றும் செண்பகவல்லி தாயாருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்த வழிபாட்டில் நத்தம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, நெய் விளக்கேற்றித் தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!