by satheesh on | 2026-03-11 07:41 PM
திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி :
திருச்சியில் சுமார் ரூ.5,655 கோடி மதிப்பில் மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. நீலகிரி, ஈரோட்டில் ரூ.3,680 கோடி முதலீட்டில் எரிவாயு விநியோக வலையமைப்பு உள்ளிட்ட புதிய திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். தமிழ்நாட்டுக்கான 5 புதிய ரயில் சேவைகளை திருச்சி விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். 2 அம்ரித் பாரத் விரைவு ரயில்கள், 2 விரைவு ரயில்கள், ஒரு பயணிகள் ரயில் சேவையை கொடியசைத்து பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். அருமையான இந்த திருச்சி மாநகருக்கு வந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் இன்றைய நாள் முக்கியமானதாகும். பாரத் பெட்ரோலியம் நிறுவனம் மூலம் திட்டங்கள் அடிக்கல் நாட்டப்படுவதில் மகிழ்ச்சி. இந்த கட்டமைப்பு 9 லட்சம் குடும்பங்களுக்கு குழாய் மூலம் நேரடியாக கேஸ் வழங்குவதை உறுதிசெய்யும். பெட்ரோலிய திட்டங்கள் மூலம் காற்று மாசுபாடு குறையும்; சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்; 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையானதாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும். மேம்பட்ட இந்தியாவை, மேம்பட்ட தமிழகத்தை உருவாக்குவதுதான் எங்கள் இலக்கு. தமிழகத்தின் நலனுக்கு முழு அர்ப்பணிப்போடு இருக்கிறது மத்திய அரசு. தமிழகத்தின் மேன்மைக்கு அல்லும் பகலும் உழைக்கிறோம்; தொடர்ந்து பாடுபடுவோம்-திருச்சி பஞ்சப்பூரில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் மோடி பேச்சு. மதுரையைத் தொடர்ந்து இன்றைய திருச்சி அரசு நிகழ்ச்சியிலும் இந்தியைத் தவிர்த்து ஆங்கிலத்தில் பிரதமர் மோடி உரை.
வளர்ந்த நாட்டுக்கு வளர்ந்த தமிழ்நாடு அவசியம் - மேம்பட்ட இந்தியாவை, மேம்பட்ட தமிழகத்தை உருவாக்குவதுதான் எங்கள் இலக்கு தமிழகத்தின் நலனுக்கு முழு அர்ப்பணிப்போடு இருக்கிறது மத்திய அரசு. தமிழகத்தின் மேன்மைக்கு அல்லும் பகலும் உழைக்கிறோம்; தொடர்ந்து பாடுபடுவோம் திருச்சி பஞ்சப்பூரில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் மோடி பேச்சு.*மாற்றத்துக்கான அலை வீசுகிறது". ஆடியில் காவிரி பெருகுவது போல் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான அலை பெருகி வீசுகிறது. திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற மக்கள் தயாராகிவிட்டனர். என்.டி.ஏ. மாற்றத்தை தரும் தமிழ்நாட்டில் ஒரு குடும்பத்துக்கு உழைக்கும் அரசு இல்லாமல், மக்களுக்கு உழைக்கும். அரசு தேவை -திருச்சியில் நடைபெறும் NDA பொதுச்கூட்டத்தில் *பிரதமர் நரேந்திர மோடி* பேச்சு. மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால், விவசாயிகளால் காலையில் பறிக்கப்படும் மதுரை மல்லிப்பூ, அன்று மாலைக்குள் பாரீஸ் உள்ளிட்ட நகரங்களுக்கு கொண்டு செல்லப்படும் .சமையல் கியாஸ் தட்டுப்பாட்டால் மக்கள் பயப்படவோ, பீதியடையவோ தேவையில்லை. வதந்திகளை நம்பாதீர்கள்; பிரச்னைகளை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொள்ளும்” திருச்சி NDA பொதுக்கூட்டத்தில் *பிரதமர் மோடி* பேச்சு.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!