by Vignesh Perumal on | 2026-03-09 03:06 PM
திண்டுக்கல் அருகே குடும்பத் தகராறு காரணமாக மனமுடைந்த தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர், பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், நல்லாம்பட்டியை அடுத்த சூசையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருடைய மகன் வருண் (35). இவர் தனியார் அவசர ஊர்தியில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். கடந்த சில நாட்களாக வருணின் குடும்பத்தில் தீர்க்க முடியாத சில பிரச்சினைகள் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
குடும்பப் பிரச்சினை காரணமாக மிகுந்த மன உளைச்சலில் இருந்த வருண், இன்று காலை திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலை சோதனைச் சாவடி பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு அவர் தான் மறைத்து வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அவர் மயங்கிக் கிடப்பதைக் கண்ட பொதுமக்கள், இது குறித்துப் போலீசாருக்குத் தகவல் அளித்தனர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்குத் திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன், சார்பு ஆய்வாளர் வனிதா மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். உயிரிழந்த வருணின் உடலைக் கைப்பற்றிய போலீசார், அதனைப் பிரேதப் பரிசோதனைக்காகத் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது இச்சம்பவம் குறித்துத் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து, தற்கொலைக்கான விரிவான காரணம் குறித்து அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவசர காலங்களில் பிறர் உயிரைக் காக்கும் பணியில் இருந்த ஒரு ஊழியர், இப்படித் தற்கொலை செய்துகொண்டது சக ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணம் ஏற்பட்டால், தமிழக அரசின் மாநில உதவி மையமான 104 அல்லது சினேகா தற்கொலை தடுப்பு மையத்தின் 044-24640050 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!