by satheesh on | 2026-03-09 11:02 AM
ஒரே நாளில் 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ஐந்து நபர்கள், ஒரே நாளில் 'தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின்' கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் தொடர்புடைய. கோவில்பட்டியைச் சேர்ந்த அசோக் (எ) அய்யாதுரை (27) மற்றும் வேல்முருகன் (34) ஆகிய இருவர் மீதும்; ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தகராறு செய்து தாக்குதலில் ஈடுபட்ட வழக்கில் தொடர்புடைய , ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த தண்டபாணி (23), மலையாண்டி (39) மற்றும் தங்கதுரை (எ) தங்கையா (22) ஆகிய மூவர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அந்தந்த காவல் நிலைய ஆய்வாளர்கள் பரிந்துரை செய்தனர். காவல் ஆய்வாளர்களின் கோரிக்கையை ஏற்று, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன், சம்பந்தப்பட்ட 5 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித் தலைவருக்குப் பரிந்துரை செய்தார். இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின் பேரில், ஐந்து நபர்களும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் பலத்த பாதுகாப்புடன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மாவட்டத்தின் அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பவர்கள் மீது இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இணை ஆசிரியர் : zN.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!