by Vignesh Perumal on | 2026-03-03 02:55 PM
கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் தங்கியுள்ள இஸ்ரேல் நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு, மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் காரணமாகத் துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை அடுத்த வட்டக்கானல் பகுதி, அதன் இயற்கை எழில் மற்றும் அமைதி காரணமாக இஸ்ரேல் நாட்டுப் பயணிகளால் 'குட்டி இஸ்ரேல்' என்று அழைக்கப்படுகிறது. தற்போது இஸ்ரேல் - ஈரான் மற்றும் காசா உள்ளிட்ட மேற்கு ஆசியப் பகுதிகளில் (வளைகுடா போர் சூழல்) போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இங்குள்ள இஸ்ரேலியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் காவல்துறை அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
வட்டக்கானல் பகுதியில் இஸ்ரேலியர்கள் தங்கியுள்ள விடுதிகள், ஹோட்டல்கள் மற்றும் அவர்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் சுழற்சி முறையில் 24 மணி நேரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அப்பகுதிக்கு வரும் புதிய நபர்கள் மற்றும் வாகனங்கள் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன. மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில், கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
வட்டாக்கானல் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிகச் சோதனைச் சாவடிகளில், சந்தேகத்திற்குரிய நடமாட்டம் ஏதேனும் உள்ளதா என்பது குறித்துப் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
ஆண்டுதோறும் நவம்பர் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில், இஸ்ரேலில் கட்டாய ராணுவப் பயிற்சியை முடித்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கொடைக்கானலுக்குச் சுற்றுலா வருவது வழக்கம். ஆனால், தற்போது நிலவும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச அளவில் இஸ்ரேலியர்களுக்கு எழுந்துள்ள அச்சுறுத்தல் காரணமாக, மத்திய மற்றும் மாநில உளவுத்துறையின் அறிவுறுத்தலின் பேரில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
போர் காரணமாகப் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாலும், உள்நாட்டில் நிலவும் பதற்றத்தாலும் இந்த ஆண்டு இஸ்ரேலியப் பயணிகளின் வருகை கடந்த ஆண்டுகளை விடக் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், தற்போது அங்கு தங்கியுள்ள பயணிகளுக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளைத் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் உறுதி செய்துள்ளது.
இந்தத் திடீர் பாதுகாப்பு ஏற்பாடுகள் அப்பகுதி மக்களிடையே சற்றுப் பரபரப்பை ஏற்படுத்தினாலும், வெளிநாட்டுப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தாடிக்கொம்பு மற்றும் கொடைக்கானல் போலீசார் தெரிவித்துள்ளனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
பணிப்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை...! திமுக கவுன்சிலர் அதிரடி கைது...!
படத்தைத் தடை செய்க..! இல்லையெனில் கடும் விளைவுகள்..! சீமான் எச்சரிக்கை...!
இரட்டைக்கொலை விவகாரம்...! தவெக தலைவர் விஜய்..! கடும் கண்டனம்..!
கொடைக்கானலில்...! பயணிகளுக்குத் துப்பாக்கி ஏந்திய...! போலீஸ் பாதுகாப்பு..!
கொடூரம்...! குடியிருப்புக்குள் புகுந்து கும்பல் தாக்குதல்..! 2 பேர் உயிரிழப்பு; 6 பேர் படுகாயம்..!