by Vignesh Perumal on | 2026-03-03 02:20 PM
பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகம், எதிர்வரும் சந்திரகிரஹணத்தை முன்னிட்டு பக்தர்களுக்கான தரிசன நேர மாற்றங்கள் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில், வரும் மார்ச் 3-ம் தேதி (03.03.2026) அன்று சந்திரகிரஹணம் நிகழ உள்ளது. இதனையொட்டி, அன்றைய தினம் மலைக்கோயிலில் நடை திறப்பு மற்றும் தரிசன நேரங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
சந்திரகிரஹணம் அன்று மாலை 03.30 மணிக்குத் தொடங்கி மாலை 06.47 மணிக்கு நிறைவடைகிறது. இதன்காரணமாக: படிப்பாதை, வின்ச் மற்றும் ரோப்கார் வழியாக வரும் பக்தர்கள் மலைக்கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மதியம் 12.00 மணிக்கு உச்சிகால பூஜை நடைபெறும். அதனைத் தொடர்ந்து, மதியம் 01.00 மணிக்கு அனைத்துச் சன்னதிகளும் திருக்காப்பிடப்படும் (நடை அடைக்கப்படும்).
கிரஹணம் முடிந்த பிறகு, மாலை 07.00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, புனித நீராடல் மற்றும் ஸம்ப்ரோச்சனை பூஜை நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து: சாயரட்சை பூஜை, தங்கரதப் புறப்பாடு, அர்த்தஜாம பூஜை ஆகியவை முறைப்படி நடைபெற்று கோயில் நடை அடைக்கப்படும்.
மறுநாள், அதாவது 04.03.2026 (புதன்கிழமை) அன்று முதல், வழக்கம்போல அதிகாலை விஸ்வரூப தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். திருவிழா மற்றும் விசேஷ காலங்களைப் போலன்றி, கிரஹண நேரத்தில் நடை அடைக்கப்படுவதால், வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்கள் இந்த நேர மாற்றத்தைக் கவனித்துத் தங்களது பயணத்தைத் திட்டமிடுமாறு கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!