by Vignesh Perumal on | 2026-03-03 01:27 PM
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே கிணற்றில் இளம் பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அடுத்த மல்லனம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தோட்டத்து கிணற்றில் இளம் பெண் ஒருவர் சடலமாக கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், கிணற்றில் இருந்த உடலை மீட்டு விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவர் பெரிய மல்லனம்பட்டியைச் சேர்ந்த தெத்தன் என்பவரின் மகள் காமாட்சியம்மாள் என்பது உறுதி செய்யப்பட்டது.
தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் இளஞ்செழியன் தலைமையில், சார்பு ஆய்வாளர் பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று உடலைக் கைப்பற்றினர். பின்னர், காமாட்சியம்மாளின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இளம் பெண்ணின் மரணம் தற்கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்த பின்னரே மரணத்திற்கான முழுமையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
கொடூரம்...! குடியிருப்புக்குள் புகுந்து கும்பல் தாக்குதல்..! 2 பேர் உயிரிழப்பு; 6 பேர் படுகாயம்..!
பழநி மலைக்கோயில்..! நடை அடைப்பு பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு...!
பழநி மலைக்கோயில்..! நடை அடைப்பு பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு...!
தோட்டத்து கிணற்றில் இளம் பெண் சடலமாக மீட்பு..!
அமித்ஷா - இபிஎஸ் டெல்லியில் சந்திப்பு - தொகுதி பங்கீடு குறித்து பேசியது என்ன?