by satheesh on | 2026-03-03 12:45 PM
தொகுதிப் பங்கீடு : அமித் ஷாவுடன் இபிஎஸ் ஆலோசித்தது என்ன?
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்றிரவு சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை. பா.ஜ.க.க்கு 35 தொகுதிகள் வழங்கி, அதிலிருந்து சில தொகுதிகளை அமமுகவுக்கு பகிரலாம் என அ.தி.மு.க. முன்மொழிந்திருந்தது. அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பா.ம.க. பிரிவுக்கு 18 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா இடம் வழங்கும் திட்டமும் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. (ராஜ்யசபா இடம் அறிவிப்பு நாளைக்குள் வெளியாகலாம்.) சிறிய கூட்டணி கட்சிகளான இந்திய ஜனநாயகக் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புதிய நீதி கட்சி மற்றும் தமிழ் மாநில காங்கிரசுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தொகுதிகள் ஒதுக்கி ‘இரட்டை இலை’ சின்னத்தில் போட்டியிடச் செய்வதே அ.தி.மு.க. யோசனையாக இருந்தது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் இருந்த இந்தக் கட்சிகள், அதேபோல் பா.ஜ.க. தொகுதி ஒதுக்கீட்டுக்குள் வர வேண்டும் என பா.ஜ.க. தரப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் 35 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்கீடு கோரி அ.தி.மு.க.விடம் பா.ஜ.க. வலியுறுத்தியதாகவும், சில கூட்டணி கட்சிகள் ‘தாமரை’ சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பு பரிசீலிக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிங்காநல்லூர், திருப்பூர் தெற்கு, பழனி, டி.நகர், மயிலாப்பூர் உள்ளிட்ட அ.தி.மு.க. பாரம்பரிய வலுவான தொகுதிகள் குறித்தும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வேறுபாடுகளை சரிசெய்யவே டெல்லி சந்திப்பு நடைபெற்றதாகவும், இறுதி முடிவை அமித் ஷா எடுப்பார் என்றும், இரண்டு அல்லது மூன்று நாட்களில் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!