| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

பிளஸ் டூ தேர்வு மையத்தினை கலெக்டர் ரஞ்ஜீத்சிங் பார்வையிட்டார்....!!!!

by admin on | 2026-03-02 05:37 PM

Share:


பிளஸ் டூ தேர்வு மையத்தினை கலெக்டர் ரஞ்ஜீத்சிங் பார்வையிட்டார்....!!!!


தேனி மாவட்டம், தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 

இன்று (02.03.2026), மேல்நிலை இரண்டாமாண்டு(+2) அரசு பொதுத்தேர்வு நடைபெற்ற மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

                   தமிழ்நாடு முழுவதும் மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பொதுத்தேர்வு                  இன்று முதல் (02.03.2026) முதல் 26.03.2026 வரை நடைபெறவுள்ளது. 

தேனி மாவட்டத்தில் 141 பள்ளிகளைச் சேர்ந்த  6,379 மாணவர்களும், 7,104 மாணவியர்களும்  என மொத்தம் 13,483 தேர்வர்கள் 57 தேர்வு  மையங்களிலும் மற்றும் தனித்தேர்வர்களாக 530 தேர்வர்கள் 10 தேர்வு மையங்களில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத நுழைவு சீட்டு (Hall Ticket) வழங்கப்பட்டிருந்தது. தேர்வினை முறையாக நடத்துவதற்கு முதன்மைக் கண்காணிப்பாளர்கள், கூடுதல் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள், அறைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் பறக்கும்படை உறுப்பினர்கள் என மொத்தம் 1074 ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

           இன்று நடைபெற்ற தேர்வில் 6,314 மாணவர்களும், 7,035 மாணவிகளும் மற்றும்                               494 தனித்தேர்வர்களும் என மொத்தம் 13,843 தேர்வர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை எழுதினார்கள்.  இதுதவிர பிரெஞ்சு மொழியில் 28 மாணவர்களும், அராபிக் மொழியில் 4 மாணவர்களும் தேர்வு எழுதினார்கள்.

                   கம்மவார் சங்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்ட நேரம், குடிநீர் வசதி,  மின்வசதி, பாதுகாப்பு வசதி போன்ற அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மைய கண்காணிப்பாளர்களிடம் கேட்டறிந்ததோடு, தேர்வு மையங்களில் உள்ள கட்டுப்பாட்டு அறையினையும் பார்வையிட்டார். 

மேலும், தேர்வுக்கட்டுப்பாட்டு மையங்களிலிருந்து தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்களை கொண்டுசெல்லவும், மீள விடைத்தாள்களை தேர்வு மையங்களிலிருந்து விடைத்தாள் சேகரிப்பு மையத்திற்குகொண்டு செல்லும் வாகனங்களுக்கும் மற்றும் விடைத்தாள் சேகரிப்பு மைத்திற்கு 24 மணி நேரமும் காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனரா என  துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.  இவ்வாய்வில் முதன்மை கல்வி அலுவலர் திரு.நாகேந்திரன் மற்றும் ஆசிரியர்கள் பலர் உடனிருந்தனர். 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment