| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் அரசியல்

மதுரையில் நடைபெற்ற என்டிஏ கூட்டணி பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் உரை !

by satheesh on | 2026-03-02 04:06 PM

Share:


மதுரையில் நடைபெற்ற என்டிஏ கூட்டணி பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் உரை !

நேற்று மதுரையில் நடைபெற்ற என்டிஏ கூட்டணி பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி ஆங்கிலத்தில் உரையாற்றினார்.  "வெற்றிவேல் வீரவேல் எனக் கூறி மதுரையில் உரையை துவக்கினார் மோடி.!

மதுரையில் என்டிஏ பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி பேசத் தொடங்குவதற்கு முன்பு வெற்றிவேல் வீரவேல் எனக் கூறினார். கூடியிருந்த தொண்டர்கள் வீரவேல் என முழங்கினர். கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் வணக்கம் என தமிழில் கூறினார். மதுரை மீனாட்சியையும் சுந்தரேஸ்வரரையும் தலை தாழ்ந்து வணங்குகின்றேன் எனக் குறிப்பிட்டுப் பேசத் தொடங்கினார் பிரதமர் மோடி. இது பாண்டிய நாடு. வீரம் விளைந்த பூமி. இந்த மகத்தான பூமியில் இருந்து பசும்பொன் முத்துராமலிங்க தேவர், மாவீரன் அழகுமுத்துக்கோன், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் ஆகியோரின் வியப்பை ஏற்படுத்தும் தியாகங்களை நினைவு கூர்கிறேன். நீதிக்கும் கண்ணியத்துக்கும் போராடிய இமானுவேல் சேகரனையும் நினைவு கூர்கிறேன் என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

திமுகவை விமர்சித்த மோடி  :

மதுரையில் என்டிஏ பொதுக் கூட்டத்தில் இந்த தேர்தல் தமிழக அரசியலில் திருப்புமுனையாகும். திமுக ஆட்சிக்கு முடிவுகட்ட மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள். திமுக ஏழைகளுக்காக வேலை செய்யவில்லை. தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டை திமுக அரசு கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது; மதுரை மக்கள் எம்ஜிஆர் உடன் நின்றனர்; அதனால் மதுரையை திமுகவுக்கு பிடிக்கவில்லை. 2021இல் ஆட்சிக்கு வந்த திமுக ஊழல் செய்து, குடும்ப ஆட்சியை நடத்தி, மக்களின் நம்பிக்கையை பாழாக்கினர்; தமிழ்நாட்டில் அடுத்த ஆட்சி என்டிஏ ஆட்சிதான்" என்று கூறினார்.

210 தொகுதிகளில் வென்று காட்டுவோம் எடப்பாடி சூளுரை  :

மதுரை என்டிஏ பொதுக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியது:"நமது கூட்டணி 210 தொகுதிகளில் வென்று அதிமுக ஆட்சி அமைக்கும். மக்கள் விரோத ஆட்சியை அகற்ற வேண்டும். 234 தொகுதிகளிலும் தேனிக்களைப் போல, எறும்புகளைப் போல உழைக்க வேண்டும்.  தமிழகத்திற்கு பல்லாயிரம் கோடி ரூபாயை பிரதமர் மோடி ஒதுக்கியுள்ளார். தமிழகத்திற்கு என்ன நிதி கொடுத்தீர்கள், என்ன திட்டம் கொண்டு வந்தீர்கள் என ஸ்டாலின் சொல்ல முடியுமா?  காற்றில் கூட ஊழல் செய்த கட்சி திமுக. மத்தியில் அமைச்சர் கிடைத்தாலும் அங்கேயும் ஊழல். ஊழல்களால் கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக. அக்கட்சியை அகற்ற தொண்டர்கள் செயல்பட வேண்டும். குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.".

திமுக சமூக நீதி புதைத்து விட்டது  - அன்புமணி காட்டம்  :

மதுரை என்டிஏ பொதுக் கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் காட்டாமாக பேசினார். "நாட்டில் 2,633 சமூகங்களில் 1,977 சமூகங்கள் வெறும் 2.5% இடஒதுக்கீட்டை மட்டுமே பெறுகிறார்கள் என்பதைக் கண்டறிந்து அவர்களுக்குச் சேர வேண்டியதைக் கொடுத்துள்ளார் பிரதமர் மோடி. ஆனால், சமூக நீதி குறித்துப் பேசும் திமுக அதனை புதைத்துவிட்டது. சமூகநீதியின் பிறப்பிடமான தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தியிருக்க வேண்டும். ஆனால், கணக்கெடுப்பு நடத்த எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று பொய் கூறுகிறார் முதல்வர் ஸ்டாலின். மத்தியிலும் மாநிலத்திலும் இணக்கமான சூழலை உருவாக்க மக்கள் விரோத திமுக ஆட்சியை விரட்டி, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க வேண்டும்."

ஸ்டாலின் கனவை தகர்ப்போம்  - டிடிவி தினகரன் சபதம்  :

மதுரை என்டிஏ பொதுக் கூட்டத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசியது:   "தமிழ்நாட்டில் எங்கும் கொலை எதிலும் ஊழல் நிலவும் ஆட்சி நடக்கிறது. குழந்தைகள், மாணவிகள் முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்குள்ளாகும் அவலம் நடந்துக் கொண்டிருக்கிறது. மாணவர்கள் முதல் குடும்பத் தலைவர்கள் வரை குடிக்கு அடிமையாக்கப்பட்டுள்ள ஆட்சி நடக்கிறது. அனைத்து வகை மக்களும் தெருவுக்கு வந்து போராடும் ஆட்சி நடக்கிறது. உதயநிதியை ஆட்சியில் அமரவைத்து முதல்வராக்கிவிடலாம் என்று கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின். அவரின் கனவை சுக்குநூறாக்கும் வகையில், இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவோம்.''


இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment