by satheesh on | 2026-03-01 09:33 PM
ஆண்டிபட்டியில் ஓபிஎஸ் போட்டியா.?முதல் வெற்றியை உறுதி செய்து விட்டதாக திமுக தொண்டர்கள் உற்சாகம் .!
ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்து, வரும் தேர்தலில் ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. . திமுக தலைமை இதற்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இந்த முடிவு தென் மாவட்ட அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வாக, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் (OPS) திமுகவில் இணைந்த செய்தி பார்க்கப்படுகிறது. நீண்டகால அரசியல் நகர்வுகளுக்குப் பிறகு அவர் எடுத்துள்ள இந்த முடிவு, தென் மாவட்ட அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், வரும் தேர்தலில் அவர் ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும், அதற்கு திமுக தலைமை பச்சைக்கொடி காட்டிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேனி மாவட்டத்தின் அரசியல் இதயமாகக் கருதப்படும் ஆண்டிபட்டி, ஒரு காலத்தில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரைச் சட்டமன்றத்திற்கு அனுப்பிய பெருமைக்குரியது. தற்போது ஓபிஎஸ் திமுக சார்பில் அங்கு களம் இறங்குவார் என்ற செய்தி பரவியவுடன், அந்தப் பகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதிமுக கோட்டையில் ஓபிஎஸ் தனது வெற்றியை கண்டிப்பாக பதிவு செய்வார் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். ஓபிஎஸ் ஆண்டிபட்டியில் போட்டியிடுகிறார் என்ற தகவல் வெளியான நிமிடம் முதல், திமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது.
வெற்றி உறுதி :
ஓபிஎஸ் போன்ற ஒரு அனுபவம் வாய்ந்த தலைவர் திமுக சின்னத்தில் போட்டியிடுவது, ஆண்டிபட்டியில் கட்சியின் வெற்றியை இப்போதே உறுதி செய்துவிட்டதாக உடன்பிறப்புகள் கருதுகின்றனர்.
கொண்டாட்டம் :
தேனி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் திமுகவினர் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் இந்தச் செய்தியைக் கொண்டாடி வருகின்றனர். "ஆண்டிபட்டி இனி உதயசூரியனின் கோட்டை" என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. ஓபிஎஸ்கு தேனி மாவட்டத்தில் இருக்கும் தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் அந்தப் பகுதியில் உள்ள சமூகக் வாக்கு வங்கி ஆகியவை திமுகவுக்குப் பெரும் பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்டிபட்டியில் அவர் போட்டியிடுவது தென் மாவட்டங்களில் உள்ள மற்ற தொகுதிகளிலும் திமுகவின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். திமுக தலைமை, ஓபிஎஸ்-ஸின் வருகையை ஒரு முக்கிய அரசியல் வியூகமாகப் பார்க்கிறது. ஆண்டிபட்டி தொகுதியை அவருக்கு ஒதுக்குவதன் மூலம், அந்தப் பிராந்தியத்தில் அதிமுகவின் செல்வாக்கை முழுமையாக முறியடிக்க முடியும் என்பது தலைமையின் கணக்காக உள்ளது.
சிட்டிங் தொகுதியான போடியில் போட்டியிடாதது ஏன்? என்ற வினாக்களும் ரத்தத்தின் ரத்தமான மற்றும் உடன்பிறப்புகள் மத்தியில் எழுகிறது.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. U
தொகுதி மாறும் ஓபிஎஸ் - ஆண்டிப்பட்டியில் போட்டியா ? திமுக தலைமை சஸ்பென்ஸ் !
உல்லாச வீடியோவை காட்டி பணம் நகை பறிப்பு - கள்ளக்காதலன் உட்பட மூவர் கைது !
முதல்வருக்கு பிரதமர் வாழ்த்து...! மகிழ்ச்சியில் முதல்வர்...!
யார் இந்த. கமேனி ? அமெரிக்கா வெறுத்தது ஏன்? ஈரான் கொடுத்த குடைச்சல் என்ன?
ஈரான் நாட்டின் உச்சத் தலைவர் காமேனி உயிரிழந்ததாக ஈரான் ஊடகங்கள் தகவல் !