| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

உல்லாச வீடியோவை காட்டி பணம் நகை பறிப்பு - கள்ளக்காதலன் உட்பட மூவர் கைது !

by satheesh on | 2026-03-01 07:06 PM

Share:


உல்லாச வீடியோவை காட்டி பணம் நகை பறிப்பு -  கள்ளக்காதலன் உட்பட மூவர்  கைது !

உல்லாசமாக இருந்த போது எடுத்த வீடியோவை காட்டி தொழிலதிபர் மனைவியிடம், ரூ.4 கோடி மதிப்புள்ள 850 கிராம் தங்கம், வைர நகைகள் பறிப்பு: தாய், சகோதரன் கைது..!


புரசைவாக்கத்தில் வாடகைக்கு குடியிருந்த போது ஏற்பட்ட கள்ளக்காதலின் போது, இருவரும் ஒன்றாக இருந்த நிர்வாண வீடியோவை காட்டி தொழிலதிபரின் மனைவியை மிரட்டி ரூ.4 கோடி மதிப்புள்ள தங்கம், வைர நகைகள், வெள்ளி பொருட்கள் பறித்த கள்ளக்காதலன் தலைமறைவாகிவிட்டார்இதுதொடர்பாக கள்ளக்காதலனின் தாய் மற்றும் அவரது சகோதரனை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான கள்ளக்காதலனை பிடிக்க தனிப்படை போலீசார் மும்பை, ராஜஸ்தான் விரைந்துள்ளனர். சென்னை புரசைவாக்கம் முருகப்பா தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் இந்து(35)(பெயர்மாற்றப்பட்டுள்ளது). தொழிலதிபரின் மனைவியான இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.  கணவர் அண்ணாசாலையில் கார் மற்றும் ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இதற்கிடையே இந்து வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடியில் கடந்த 2025ம் ஆண்டு சங்கீதா(53) தனது மூத்த மகன் திலீப்(34) மற்றும் இளைய மகன் அங்கிட்(31) ஆகியோருடன் வாடகைக்கு குடியேறினார். அப்போது சங்கீதா தொழிலதிபர் மனைவி இந்துவிடம் அடிக்கடி பேசி வந்துள்ளார். இதனால், தொழிலதிபர் மனைவி சங்கீதா வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இந்த பழக்கத்தில் சங்கீதாவின் மூத்த மகன் திலீப் அடிக்கடி தொழிலதிபரின் மனைவியிடம் பேசி வந்துள்ளார்.  இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் கள்ளக்காதலாக மாறியது. இதனால் திலீப் தொழிலதிபர் கடைக்கு சென்ற பிறகு வீட்டில் தனியாக இருக்கும் இந்து வீட்டிற்கு சென்று இருவரும் தனிமையில் இருந்து வந்துள்ளனர். இதனால் தொழிலதிபர் மனைவி இந்து திலீப்புக்கு சரியாக வேலை இல்லாததால் செலவுக்கு தன்னிடம் உள்ள நகைகளை கொடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் தொழிலதிபரின் மனைவி தனது கள்ளக்காதலனிடம் வீட்டில் வைத்துள்ள தங்கம், வைர நகைகளை காட்டி எல்லாம் உனக்கு தான். நாம் இருவரும் சந்தோசமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.  இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட திலீப், தொழிலதிபரின் மனைவியிடம் ஒவ்வொரு முறையும் உல்லாசமாக இருந்து விட்டு நகைகளை வாங்கி கொண்டு வந்துள்ளார். தொழிலதிபரின் மனைவியும் வீட்டில் சும்மா இருக்கும் நகைகள் தானே என்று கொடுத்து வந்துள்ளார். இதற்கிடையே கள்ளக்காதலன் திலீப் தனது வாடகை வீட்டை காதலியான தொழிலதிபர் மனைவியிடம் தெரிவிக்காமல் திடீரென கடந்த 10 நாட்களுக்கு முன்பு காலி செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். வழக்கம் போல் தொழிலதிபர் மனைவி தனது கணவன் கடைக்கு சென்றதும், தனிமையில் இருக்க தனது கள்ளக்காதலனை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. உடனே அவரது தாய் சங்கீதாவுக்கு போன் செய்த போது, அவரது போனும் சுவிட்ச் ஆப் செய்து இருந்தது. இதனால், சந்தேகமடைந்த தொழிலதிபர் மனைவி, கள்ளக்காதலன் வீட்டிற்கு சென்ற போது, வீடு பூட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது. அடுக்குமாடி குடியிருப்பில் வேலை செய்யும் செக்யூரிட்டிகளிடம் கேட்ட போது, இரவோடு இரவாக திலீப் வீட்டை காலி செய்துவிட்டு சென்றுவிட்டதாக கூறினார்.  அதை கேட்டு தொழிலதிபர் மனைவி அதிர்ச்சியடைந்தார். தனது கள்ளக்காதலனிடம் பல கோடி மதிப்புள்ள தங்கம், வைர நகைகள், வெள்ளி பொருட்கள் கொடுத்து வைத்ததை திரும்ப எப்படி வாங்குவது என்று தெரியாமல் அவதிப்பட்டுள்ளார். அதேநேரம் தொழிலதிபர் தனது உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிக்கு செல்ல வேண்டி வீட்டில் உள்ள நகைகளை சரிபார்த்துள்ளார்.  அப்போது லாக்கரில் இருந்த தங்கம், வைர நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் குறைந்து இருந்ததை கண்டு அவரது மனைவியிடம் கேட்டுள்ளார். அப்போது கணவரின் காலில் விழுந்து, திலீப் என்னுடன் தனிமையில் இருந்த போது ரகசியமாக செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து வைத்து என்னை மிரட்டி நகைகளை பறித்து சென்றதாக கூறி அழுதுள்ளார்.  அதன் பிறகு மொத்த நகைகளை பரிசோதனை செய்த போது, 850 கிராம் தங்க நகைகள், வைர நகைகள், 2.5 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.20 ஆயிரம் குறைந்தது தெரியவந்தது. பின்னர் சம்பவம் குறித்து தொழிலதிபர் தனது மனைவி மூலமே வேப்பேரி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு கள்ளக்காதலன் திலீப் மற்றும் அவரது தாய், சகோதரன் மீது புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார், தலைமறைவான திலீப் மற்றும் அவரது தாய் செல்போன் எண்களை வைத்து விசாரணை நடத்தினர். அப்போது புரசைவாக்கம் பகுதியில் வேறு ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பதாக செல்போன் சிக்னல் காட்டியது. உடனே போலீசார் நேற்று கள்ளக்காதலன் தாய் சங்கீதா மற்றும் அவரது சகோதரன் அங்கிட் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. உடனே கள்ளக்காதலன் தாய் சங்கீதா மற்றும் அவரது சகோதரன் அங்கிட் ஆகியோரை போலீசார் கைது செய்து வாக்குமூலம் பதிவு செய்தனர். மேலும், முக்கிய குற்றவாளியான திலீப் நகைகளுடன் தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க துணை கமிஷனர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் திலீப் மும்பை வழியாக சொந்த மாநிலமான ராஜஸ்தான் சென்று இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் தனிப்படை போலீசார் மும்பை மற்றும் ராஜஸ்தான் விரைந்துள்ளனர். தனிப்படை போலீசார் திலீப்பை கைது செய்தால் தான் இது போல் சென்னையில் எத்தனை தொழிலதிபர்கள் மனைவிகளை காதல் வலை வீசி அவர்களுடன் உல்லாசமாக இருந்து அதை வீடியோ எடுத்து நகை மற்றும் பணம் பறித்து வந்தது முழுமையாக தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.


இணை ஆசிரியர்  : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment