by satheesh on | 2026-03-01 09:29 AM
ஈரான் நாட்டின் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனி உயிரிழந்தார்: ஈரான் ஊடகங்கள் தகவல் :
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதலில், ஈரான் உச்சத் தலைவர் காமேனி கொல்லப்பட்டதாக. ஈரான் ஊடகங்களும், செய்தி வெளியிட்டுள்ளன.*இஸ்ரேல் குண்டு வீச்சில் காமேனியின் குடும்பம் பலி. காமேனியின் மகள் மருமகன் பேரன் ஆகியோர் பலியானதாக அறிவிப்பு வீதிகளில் இறங்கி கொண்டாடும் ஈரான் மக்கள். காமேனியின் குடும்ப மரணச் செய்தியைக் கொண்டாடும் விதமாக ஈரான் முழுவதும் உள்ள நகரங்களில் ஏராளமான ஈரானியர்கள் தெருக்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். காமேனிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரது ஆதரவாளர்களும் ஊர்வலம் நடத்தி வருகின்றனர். ஈரான் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்ட நிலையில், ஈரானில் 40 நாட்கள் பொது துக்கம் அனுசரிக்கப்படுகிறது; 7 நாட்கள் பொது விடுமுறையும் அறிவிப்பு. உச்சத் தலைவர் கமேனியின் படுகொலைக்கு பதிலடி கொடுக்காமல் விடமாட்டோம் என ஈரான் அதிபர் மாளிகை சூளுரை. உச்சத் தலைவர் கமேனியின் படுகொலை மாபெரும் குற்றம்; பதிலடி கொடுக்காமல் விடமாட்டோம் பழிவாங்கும் நடவடிக்கை கடுமையாக இருக்கும் என ஈரான் ராணுவமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.!
டிரம்ப்: வரலாற்றில் மிகவும் தீய மனிதர்களில் ஒருவரான கமேனி இறந்துவிட்டார். இது ஈரான் மக்களுக்கு மட்டுமல்ல, அனைத்து பெரிய அமெரிக்கர்களுக்கும் நீதி. அவரால் எங்கள் உளவுத்துறை மற்றும் மிகவும் அதிநவீன கண்காணிப்பு அமைப்புகளைத் தவிர்க்க முடியவில்லை. மத்திய கிழக்கு மற்றும் உண்மையில் உலகம் முழுவதும் அமைதி என்ற எங்கள் நோக்கத்தை நாம் அடைவோம்!
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!