| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் TVK

மனைவியுடனே கூட்டணி வைக்க முடியாத விஜய், மக்களுடன் எப்படி கூட்டணி அமைப்பார்? ★ விஜய்யை வறுத்தெடுத்த அர்ஜுன் சம்பத்

by aadhavan on | 2026-02-28 07:38 PM

Share:


மனைவியுடனே கூட்டணி வைக்க முடியாத விஜய், மக்களுடன் எப்படி கூட்டணி அமைப்பார்? ★ விஜய்யை வறுத்தெடுத்த அர்ஜுன் சம்பத்

சனாதன தர்ம எதிர்ப்பாளர்களை வீழ்த்த

இந்து வாக்கு வங்கி உருவாக வேண்டும்


★ மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நடத்திய ஜெயேந்திரர் ஆராதனை விழாவில் அர்ஜூன் சம்பத் வேண்டுகோள்


இந்துக்களின் உரிமையைப் பறிக்கும் வேலையை மட்டுமே செய்து வரும் திராவிட கட்சிகளை வீழ்த்த, இந்துக்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டுமென இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் சார்பில், காஞ்சி ஜெயேந்திரரின் 8வது ஆராதனை வைபவம், எஸ்.எஸ்.காலனி காஞ்சி பெரியவர் கிருஹத்தில் நடைபெற்றது. அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவன நெல்லை பாலு வரவேற்றார். நிகழ்வில் திருவண்ணாமலை ஆதீனம் கருணாநிதி சுவாமிகள், இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலை கண்ணன், வழக்கறிஞர் புதூர் ராமகிருஷ்ணன், தமிழக பத்திரிகையாளர்கள் சங்க மாநிலச் செய்தி தொடர்பாளர் எழுத்தாளர் மு.ஆதவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 



பின்னர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களிடம் பேசியதாவது;

சனாதன இந்து தர்மத்தை புனரமைத்தவர் ஆதிசங்கரர். எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறான். இறைவனும் உயிர்களும் வேறு வேறு அல்ல என்பதை 'அத்வைதம்' என்ற கோட்பாடாகச் சொன்னார். அவர் உருவாக்கிய குரு மரபில் தோன்றியவர் ஜெயேந்திரர். சாதி மத பேதமின்றி நாடு முழுக்க பயணப்பட்ட குரு அவர். இந்து சமுதாயத்தை ஒழுங்குபடுத்த எல்லா தரப்பு மக்களின் வீடுகளுக்கும் சென்ற ஆன்மீகப் புரட்சியாளர் ஜெயேந்திரர்.

மக்களுக்கான அடிப்படை தேவைகளான கல்வி நிலையம், மருத்துவ மனைகளையும் நாடு முழுக்க உருவாக்கிய பெருமை ஜெயந்திரருக்கு உண்டு. பல மொழிகளை கற்று அறிந்த வித்தகரான ஞான சூரியனாக திகழ்ந்தார். தன் வாழ்க்கையை மக்களின் நலனுக்காகவே அர்ப்பணித்துக் கொண்டவர், ஜனகல்யாண் போன்ற அமைப்புகளையும் தோற்றுவித்தார். இந்து மதத்தை தழைக்கச் செய்த குரு மரபில் குறிப்பிடத்தக்கவர் ஜெயேந்திரர்.

இப்படியாக இந்து தர்மம் செழிப்பாக வளர்ந்த தமிழ்நாட்டில், அதனை அழிக்கும் முயற்சிகள் நடக்கின்றன. தேசிய, தமிழக அடையாளங்களை அழிக்கிறது தி.மு.க., அரசு. இந்துக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மட்டுமே, அரசு செய்கிறது. அவர்களுக்கு இந்துக்கள் அனைவரும் இணைந்து தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும். 100 சதவீதம் இந்துக்கள் வாக்கு அளித்தாலே அவர்களை வீட்டுக்கு அனுப்பி விடலாம். 

தேர்தல் ஆணைய சீர்திருத்த நடவடிக்கைகளைப் பாராட்டுகிறோம். அதேசமயம் ஓட்டுக்கு பணம் என்பதை, மாற்றுவழியில் கொடுத்த தி.மு.க.,வை கட்டுப்படுத்த ஆணையம் தவறி விட்டது. நீதிமன்றங்கள் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து தேர்தல் ஆணையத்திலும் புகார் செய்திருக்கிறோம்.

பிரதமர் மோடியின் மதுரை வருகை, பெரிய மாற்றத்தை உண்டாக்கும். திருப்பரங்குன்றம் மலை மேலே பிரதமர் வர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம். 

விஜய் கட்சி, தமிழ்நாடு தேர்தல் களத்திலேயே இல்லை. மனைவியுடனே கூட்டணி சரியாக இல்லாதவர், மக்கள் கூட்டணி எப்படி வைக்க முடியும்? நடிகையுடன் லிவிங் டுகெதர் இருப்பதை, அவரது மனைவியே சுட்டி காட்டி நீதிமன்றம் சென்றுவிட்டார். 

இந்துக்களின் உரிமைகளைக் காக்க, மார்ச்.15ல், தமிழ், தமிழர், தமிழகம் மீட்பு மாநாடு சென்னையில் நடக்கிறது. 

இவ்வாறு அவர் பேசினார்.

அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு ஏற்பாடுகள் செய்திருந்தார்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads
Recent News

Leave a Comment