by satheesh on | 2026-02-28 06:39 PM
போக்ஸோ சட்டத்தில் திமுக நிர்வாகி கைது.... இரண்டரை வைத்து குழந்தையை நாசமாகிய கொடுமை .. முதல்வரின் இரும்பு கரம் எங்கே போனது .?
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அடுத்துள்ள ஜேசுராஜபுரம் ஊராட்சி கவுண்டன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் 24 வயது பிரின்சி. இவரும் ஓசூரில் கட்டிட வேலை செய்து வந்த திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாந்தூர் கிராமத்தை சேர்ந்த 28 வயதான சூர்யா என்பவரும் காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது. கணவனிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்த பிரின்சி, குழந்தையுடன் தனது தாய் வீட்டுக்கு வந்து அங்கேயே வாழ்ந்து வந்துள்ளார். சூர்யா கவுண்டன் கொட்டாய் கிராமத்திற்கு அவ்வபோது சென்று தனது குழந்தையை பார்த்து விட்டு சென்றுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 11ஆம் தேதி குழந்தைக்கு வலிப்பு வந்ததாக கூறி பிரின்சி அஞ்செட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார். குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அறிந்த குழந்தையின் தந்தை சூர்யா குழந்தை சாவில் சந்தேகம் இருப்பதாக அஞ்செட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தையின் மர்ம உறுப்பில் உள்காயங்கள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இளம்பெண்ணின் கள்ளக்காதலனான திமுக இளைஞர் அணி நிர்வாகி பெரியநாயகம் என்பவர், குழந்தையை பாலியல் தொந்தரவு செய்ததும், அதனால் குழந்தை இறந்ததும் தெரியவந்துள்ளது. பிரின்சி கணவரை பிரிந்த பிறகு அஞ்செட்டியைச் சேர்ந்த திமுக நிர்வாகி பெரியநாயகம் என்பவருடன் தொடர்பில் இருந்துள்ளார். பெரியநாயகம் திமுக இளைஞர் அணி கிளை செயலாளராக உள்ளவர். அவர் அடிக்கடி பிரின்சியை சந்திக்க அஞ்செட்டி வந்து சென்றுள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் குழந்தையின் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தது தெரிய வந்தது.இதையடுத்து அஞ்செட்டி போலீசார் பெரியநாயகத்தை கைது செய்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தர்மபுரி சிறையில் அடைத்தனர். குழந்தையின் தந்தை சூர்யா கண்ணீர் மல்க 'என் குழந்தையை கொலை செய்தவனுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்' என கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் உருவாகி உள்ளது என்கிற குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், தற்பொழுது திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் உருவாகி இருக்கிறது.தமிழக காவல்துறை குறிப்புகளில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள தகவல்களின் படி, 2020 முதல் 2024 வரை குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், குறிப்பாக POCSO வழக்குகள் கணிசமாக அதிகரித்துள்ளன என கூறப்படுகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதே காலகட்டத்தில் உயர்வு கண்டுள்ளதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. மேலும் கிருஷ்னகிரி சம்பவம் அரசியல் விவாதத்தைத் தாண்டி, குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் அமைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்து வரும் நிலையில், தற்பொழுது திமுக நிர்வாகியே குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளது மிக பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
இரண்டரை வயது குழந்தையிடம் பாலியல் அத்துமீறல் ! திமுக நிர்வாகி போக்சோவில் கைது !!
செம்மரம் கடத்திய விஏஓ குடும்பம் - கிடுக்கிப்பிடி விசாரணை ! முக்கிய புள்ளிக்கு வலை !!
அதிமுக நிர்வாகி மருதமுத்து படுகொலை..! 6 பேர் அதிரடி கைது..! பெரும் பரபரப்பு..!
திமுக - காங்கிரஸ்..! தொகுதிப் பங்கீட்டில் டுவிஸ்ட்...!