by Vignesh Perumal on | 2026-02-27 06:51 PM
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகபட்டியில் விதிமுறைகளை மீறிச் செயல்பட்ட தனியார் மதுபான பாருக்கு அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்த வடுகபட்டியில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அனுமதியின்றி செயல்பட்ட தனியார் மதுபான பார் ஒன்றை அதிகாரிகள் அதிரடியாக மூடிச் சீல் வைத்தனர்.
வடுகபட்டி பகுதியில் ‘மனமகிழ் மன்றம்’ என்ற பெயரில் தனியார் மதுபான பார் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த பாருக்கு நேற்று தேனி மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை உதவி இயக்குனர் பஞ்சாபகேசன் தலைமையிலான அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.
ஆய்வின் முடிவில், அந்த மதுபான பாரை உடனடியாக இழுத்து மூடிய அதிகாரிகள், வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் முன்னிலையில் அந்த கட்டிடத்திற்குப் பூட்டிச் ‘சீல்’ வைத்தனர்.
இது குறித்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: "இந்த நிறுவனம் ‘மனமகிழ் மன்றம்’ என்ற பெயரில் முறையாகப் பதிவு செய்யப்பட்டுச் செயல்பட்டு வந்தது. ஆனால், சில காரணங்களால் இதன் பதிவு ரத்து செய்யப்பட்டது. பதிவு ரத்து செய்யப்பட்ட பிறகு அந்த பார் தொடர்ந்து இயங்க சட்டப்படி அனுமதி இல்லை. இது தொடர்பான வழக்கில், சம்பந்தப்பட்ட பாரைச் சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவின் அடிப்படையிலேயே தற்போது இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது."
இந்த அதிரடி நடவடிக்கையின் போது அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்கக் முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முறையாகப் பதிவு செய்யாமல் அல்லது விதிகளை மீறிச் செயல்படும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!