| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

திண்டுக்கல்லில் நகைக்கடை உரிமையாளருக்கு நேர்ந்த சோகம்...! பரிதாப பலி...!

by Vignesh Perumal on | 2026-02-25 12:14 PM

Share:


திண்டுக்கல்லில் நகைக்கடை உரிமையாளருக்கு நேர்ந்த சோகம்...! பரிதாப பலி...!

திண்டுக்கல் அருகே கடன் பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் இருந்த நகைக்கடை ஊழியர், பெட்ரோல் ஊற்றித் தீக்குளித்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

திண்டுக்கல் பாலகிருஷ்ணபுரம், கோவிந்தராஜ் நகரைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருடைய மகன் மணிவேல் (32). இவர் திண்டுக்கல் நகரின் முக்கியப் பகுதியான கடைவீதியில் உள்ள ஒரு நகைக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

மணிவேலுக்குக் கடந்த சில காலமாகவே அதிக அளவில் கடன் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

மன அழுத்தத்தின் உச்சத்தில் இருந்த மணிவேல், கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி அன்று யாரும் எதிர்பாராத விதமாகத் தனது உடலில் பெட்ரோலை ஊற்றித் தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மணிவேலுக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும், உடலில் தீக்காயங்கள் பலமாக இருந்ததால், சிகிச்சை பலன் அளிக்காமல் மணிவேல் இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் மற்றும் சார்பு ஆய்வாளர் வனிதா தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மணிவேல் தற்கொலைக்குக் தூண்டப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.










நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment