by admin on | 2026-02-23 08:34 PM
தேனி மாவட்டம் வாக்காளர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்காக https மாவட்ட தொடர்பு மையம் (District Contact Center ) அமைக்கப்பட்டுள்ளது – மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட தொடர்பு மையத்தை (District Contact Center) மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் இன்று
நேரில் பார்வையிட்டார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (23.02.2026) வெளியிடப்பட்டுள்ளது. தகுதிபெற்ற அனைத்து வாக்காளர்களின் பெயர்களும் சரிபார்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள இப்பட்டியலில், வாக்காளர்கள் தங்களது பெயர் இடம் பெற்றுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
அதனடிப்படையில், பொதுமக்களுக்கு வாக்காளர் பட்டியல் தொடர்பான
சந்தேகங்களை தெளிவுபடுத்தும் வகையில், மாவட்ட ஆட்சியரகத்தில்
(அறை எண் 22A, முதல் தளம்) மாவட்ட தொடர்பு மையம் (District Contact Center) அமைக்கப்பட்டுள்ளது. இம்மையமானது 23.02.2026 முதல் 31.05.2026 வரை அல்லது 2026 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் முடியும் வரை (எது முன்னதாக வருகிறதோ அதுவரை) 24 x 7 நேரமும் செயல்பட உள்ளது.
மேலும், 1950 என்ற எண்ணிற்கு தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டும் தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.
இம்மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட
ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு, வாக்காளர்களின் சந்தேகங்களை தெளிவுபடுத்தி, வாக்காளர்களுக்கு தேவையான உரிய விளக்கங்களை புரியும் வகையில் எடுத்துரைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில் வட்டாட்சியர் (தேர்தல்) திரு.சுருளி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
வாக்காளர்களின் சந்தேக தொடர்பு மையம் கலெக்டர் ரஞ்ஜீத் சிங் ஆய்வு...!!!
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக் கொடுத்த பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன்....!!!
உடன்பிறப்பாக வாங்க .....! ஷாக் கொடுத்த ஸ்டாலின் ....!! ஓ. பன்னீர்செல்வத்தின் அடுத்த மூவ் .....?
கேரளா லாட்டரியில் விழுந்த 20 கோடி பரிசு யாருக்கு ? எனக்குத்தான் வேணும் ! கோர்ட்டில் விசித்திர வழக்கு !!
அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்...! தங்கம் விலை புதிய உச்சம்..!