by satheesh on | 2026-02-23 07:59 AM
நகரின் நடுவில் தொழிற்சாலை - கண்டுகொள்ளாத நாகர்கோவில் மாநகராட்சி - சுற்றுப்புற மாசால் பொதுமக்கள் அவதி.!
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 42-வது வார்டு, இருளப்பபுரம் காமராஜர் பால மந்திர் சாலை இயங்கும் தொழிற்சாலையால் குடியிருக்க தகுதியற்ற, மாசடைந்து அபாயகரமான பகுதியாக மாறி வருகிறது. முறையான திட்ட அனுமதி பெற்று மக்கள் வசிக்கும் வீடுகளுக்கு அருகிலேயே, விதிமுறைகளைத் துச்சமாக மதித்து இயங்கி வரும் ஒரு ஹாலோ பிளாக் (Hollow Block) தொழிற்சாலை பொதுமக்களின் நிம்மதி இன்றி தவித்து வருகின்றனர் . வீடுகளுக்குள் இருந்தால் ஏதோ இடி முழக்கம் கேட்பது போன்ற பயங்கர சத்தமும், நிலநடுக்கம் போன்ற அதிர்வும் ஏற்படுவதால் முதியவர்களும் குழந்தைகளும் கடும் அச்சத்தில் உள்ளனர். தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் சிமெண்ட் தூசியும், கனரக வாகனங்களின் கரும்புகையும் அப்பகுதி மக்களின் நுரையீரலைப் பதம் பார்த்து வருகிறது. இது குறித்துக் கேள்வி கேட்கும் மக்களிடம், "நீங்கள் இந்த ஊர்க்காரர்கள் இல்லை, இங்கே இருக்க வேண்டுமானால் எதுவும் பேசாமல் இருக்க வேண்டும், இல்லை நடக்கக்கூடாதது நடந்துவிடும் என ஒரு கும்பல் கொலை மிரட்டல் விடுத்து வருகிறது. நாங்கள் வாங்கிய இடத்தில் குடியிருக்கவே பயமாக இருக்கிறது. அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை. மாநகராட்சி மற்றும் காவல்துறையின் ஆசிர்வாதம் இந்த அத்துமீறல்களுக்கு இருக்கிறதா?" என ஆதங்கப்படுகின்றனர் அப்பகுதி மக்கள்.
நிர்வாகத்தின் மெத்தனப் போக்கு :
மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக, விதிமீறிச் செயல்படும் நபர்களுக்கு அதிகாரிகள் ஆதரவாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. 'தூய்மை நாகர்கோவில்' என்று பேசும் மாநகராட்சி, மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் மாசுகளைப் பரப்பும் இத்தகைய தொழில்களுக்கு மாநகராட்சி எப்படி அனுமதி அளித்தது?
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் உடனடியாக இப்பகுதியில் ஆய்வு செய்து, குடியிருப்பு பகுதியில் விதிகளுக்கு மாறாக இயங்கும் இந்தத் தொழிற்சாலையை அகற்ற வேண்டும். பொதுமக்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!