by satheesh on | 2026-02-22 06:54 PM
அமைச்சர் மூர்த்திக்கு எதிராக அழகிரி ஆதரவாளர் மன்னனை நிறுத்தும் அதிமுக? செல்லூர் ராஜு போடும் கணக்கு!
அதிமுகவில் இணைந்துள்ள மதுரை முன்னாள் துணை மேயர் மன்னனை அமைச்சர் மூர்த்திக்கு எதிராக தேர்தலில் போட்டியிட வைக்க தயார் செய்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. 2021 சட்டசபைத் தேர்தலில் அமைச்சர் மூர்த்தி மதுரை கிழக்கு தொகுதியில் சுமார் 52 சதவிகித வாக்குகளை பெற்று மிகப்பெரிய வெற்றியை பெற்றார். இதனால் மூர்த்திக்கு எதிராக மன்னனை தேர்தலில் நிறுத்துவது அதிமுகவுக்கு பலனளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த 2 நாட்களாக மதுரை அதிமுக குதூகலமாக இருக்கிறது. ஏனென்றால் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளர்களாக கருதப்பட்ட மன்னன் மற்றும் எஸ்ஸார் கோபி இருவரும் அதிமுகவில் ஐக்கியமாகி இருக்கிறது. மதுரை மாநகராட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் சோலை ராஜா மூலமாக இந்த திட்டம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. நீண்ட நாட்களாகவே திமுகவில் தன்னை மீண்டும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று மன்னன் கோரிக்கை வைத்து வந்தார். முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்த போதும், அவர் ஒப்புதல் கொடுக்கவில்லை. இதன் காரணமாக மன்னன் உடனடியாக அதிமுகவில் ஐக்கியமாகி இருக்கிறார். அவருடன் எஸ்ஸார் கோபியையும் அழைத்து சென்றிருக்கிறார். எஸ்ஸார் கோபி தனக்கு எம்எல்ஏ சீட் கிடைக்கும் என்று எதி்ர்பார்த்தார். ஆனால் திமுக ஒப்புக் கொள்ளவில்லை. இவர்கள் இருவரால் முக்குலத்தோர் சமூக வாக்குகளை அதிமுக அறுவடை செய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் மதுரை முன்னாள் மேயர் மன்னன் தேர்தல் பணிகளில் கில்லியாக செயல்படுபவர். மு.க.அழகிரிக்காக ஏராளமான பணிகளை மேற்கொண்டிருக்கிறார். திருமங்கலம் ஃபார்முலாவை செயல்படுத்தியதில் மன்னனின் பங்கும் அதிகம். இதனால் மதுரை கிழக்கு தொகுதியில் அமைச்சர் மூர்த்திக்கு எதிரான மன்னனை களமிறக்க அதிமுக தயாராகி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. 2021 சட்டசபைத் தேர்தலில் மதுரை கிழக்கு தொகுதியில் திமுக சார்பாக மூர்த்தியும், அதிமுக சார்பாக கோபாலகிருஷ்ணனுன் போட்டியிட்டனர். இதில் திமுக சார்பாக போட்டியிட்ட மூர்த்தி சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றிக்கு பின் சொந்த தொகுதியில் மூர்த்தி ஏராளமான பணிகளை செய்து முடித்தார். சமூக ரீதியிலான வாக்குகளையும் சரியாக அறுவடை செய்து வருகிறார். இதனால் மதுரை கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட மதுரை அதிமுக நிர்வாகிகள் தயக்கம் காட்டி வந்தனர். இப்படியான சூழலில் மன்னன் அதிமுகவில் இணைந்திருக்கிறார். மன்னனை அழைத்த போதே எம்எல்ஏ சீட் கொடுக்கிறோம் என்றே முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அழைத்ததாக தெரிகிறது. இதன் காரணமாகவே எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மன்னன் மற்றும் எஸ்ஸார் கோபி இணைப்பு நிகழ்ச்சி நடந்ததாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். இது அதிமுகவுக்கு பலன் கொடுக்குமா என்பதை தேர்தலுக்கு பின்னரே பார்க்க வேண்டும். நன்றி !
இணை ஆசிரியர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!