| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் DMK

தேர்தல் களம் தயார்..! 7 பேர் கொண்ட குழுவை அமைத்தது திமுக..!

by Vignesh Perumal on | 2026-02-21 11:20 AM

Share:


தேர்தல் களம் தயார்..! 7 பேர் கொண்ட குழுவை அமைத்தது திமுக..!

வரும் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக 7 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை திமுக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

திமுகவின் பொருளாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு அவர்கள் இந்தக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் அடங்கிய அனுபவம் வாய்ந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு (குழுத் தலைவர்), கே.என்.நேரு (முதன்மைச் செயலாளர் & அமைச்சர்), திருச்சி சிவா (நாடாளுமன்றக் குழுத் தலைவர் - மாநிலங்களவை), ஆ.ராசா (துணைப் பொதுச்செயலாளர்), ஆர்.எஸ்.பாரதி (கழக அமைப்புச் செயலாளர்), எ.வ.வேலு (அமைச்சர்), எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் (அமைச்சர்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஏற்கனவே திமுக தலைமை அறிவித்திருந்தபடி, கூட்டணிக் கட்சிகளுடன் முறைப்படியான பேச்சுவார்த்தை நாளை (பிப்ரவரி 22) முதல் தொடங்க உள்ளது. முதற்கட்டமாக கூட்டணியில் உள்ள முக்கியக் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக முதல்வர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்தக் குழு ஒவ்வொரு கட்சியுடனும் தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தி, தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் ஒதுக்கீடு குறித்து இறுதி செய்யும். காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இடதுசாரிக் கட்சிகள் மற்றும் மதிமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு இதன் மூலம் வேகமெடுக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுகவின் இந்த அதிரடி நடவடிக்கை அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.









நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads
Recent News

Leave a Comment