by admin on | 2026-02-19 11:22 PM
வேலூர் அருகே ராகவன் கொடூரமாக கொலை வழக்கில், மாமனார் அமல்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே உள்ள கொல்லமங்கலம் புதுமனை கிராமத்தை சேர்ந்தவர் ராகவன் செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார்.
இவருக்கும் தனியார் ஆஸ்பத்திரியில் செவிலியராக வேலை செய்துவந்த சுவேதா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. . இவர்களது காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி கடந்த 2022 ல் திருமணம் செய்து கொண்டனர்
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 8 ல் ராகவன் ரத்த வெள்ளத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராகவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். சந்தேகத்தின் பேரில் மனைவி சுவேதா, மாமனார் அமுல்ராஜ் உள்ளிட்ட 3 பேரிடம் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வேலை இல்லாத ராகவன் மது போதைக்கு அடிமையாகி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து சுவேதாவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். மேலும் பல பெண்களுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். இது தொடர்பாக சுவேதாவின் தந்தை அமுல்ராஜ் பலமுறை ராகவனை கண்டித்துள்துள்ளார். ராகவன் திருந்தவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அமுல்ராஜ் தனது குடும்ப நண்பரான பைனான்ஸ் தொழில் செய்து வரும் கார்த்திக் என்பவரை வைத்து ராகவனை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.
இதனையடுத்து ராக வளை .கட்டையால் அடித்தும் அருவாளால் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக அமல்ராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்று போல போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!