by satheesh on | 2026-02-19 09:47 PM
திமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு எத்தனை இடங்கள்.. பிரேமலதா அதிரடி முடிவுக்கு என்ன காரணம்?
கடந்த ஒன்றரை மாதமாக யாருடன் கூட்டணி என்பது தொடர்பான முடிவை அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வந்த தேமுதிக, திடீர் திருப்பமாக இன்று திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. திமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு எத்தனை தொகுதிகள் வழங்க வாய்ப்பு உள்ளது? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம். தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக - பாஜக கூட்டணி, விஜய்யின் தவெக மற்றும் நாம் தமிழர் என நான்கு முனை போட்டி நிலவுகிறது. தற்போதய நிலவரப்படி திமுக கூட்டணி வலுவாக உள்ளது - பிரேமலதா விஜயகாந்த் !
அதே நேரத்த்தில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என குரல் கொடுத்து வருவதால் கூட்டணி பேச்சுவார்த்தை அதிகாரப்பூர்வமாக தொடங்குவதில் தாமதம் ஆகி வருகிறது. இதற்கு இடையே, தேமுதிக எந்த பக்கம் செல்லும் என்பது குறித்த பேச்சு கடந்த சில நாட்களாகவே அரசியல் வட்டாரத்தில் அதிகம் பேசப்பட்ட ஒன்றாக இருந்தது. கடந்த ஜனவரியில் கடலூரில் நடைபெற்ற மாநாட்டில் யாருடன் கூட்டணி என்பதை அறிவிப்பதாக தேமுதிக கூறியது. ஆனால், கூட்டணி யாருடன் என்பதை முடிவு செய்துவிட்டோம் என்றும் உரிய நேரத்தில் அறிவிப்போம் என ட்விஸ்ட் வைத்தது. அதிமுக மற்றும் திமுக என இரு கட்சிகளிடமும் தேமுதிக பேசி வருவதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்தது.
திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 7 + 1
எனினும், இதனை பிரேமலதா விஜயகாந்த் கண்டித்தார். நாங்கள் யாருடனும் பேசவில்லை என்று கூறியிருந்தார். அதிமுக கூட்டணியில் கடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட தேமுதிகவிற்கு ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்க உறுதி அளிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால், தேமுதிகவிற்கு கடந்த ஆண்டு நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலின் போது சீட் கொடுக்க அதிமுக மறுத்தது. இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இத்தகைய பரபரப்புக்கு நடுவே திடீர் திருப்பமாக தேமுதிக, திமுக பக்கம் இணைந்துள்ளது. தேமுதிகவிற்கு 7 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்படலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. தமிழகத்தில் 6 இடங்களுக்கான மாநிலங்களை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு திமுக செக்?
இதில் திமுக தரப்பில் 4 பேரையும் அதிமுக தரப்பில் 2 பேரையும் நிறுத்த முடியும். இந்த தேர்தல் அறிவிப்பு வெளியான மறுநாளே தேமுதிக , திமுக கூட்டணியில் ஐக்கியம் ஆகியுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூட அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை பிரேமலதா சந்தித்தார். கோவையில் நடைபெற்ற ஈஷா யோகா நிகழ்ச்சியில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக இணையலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிரடி அரசியல் திருப்பமாக இந்த முடிவை தேமுதிக எடுத்துள்ளது. தேமுதிகவை தங்கள் கூட்டணியில் இணைத்து இருப்பது மூலம் காங்கிரஸ் கட்சிக்கு திமுக செக் வைத்ததாகவே பார்க்கப்படுகிறது. 500 வாக்குகள் கூட முடிவு செய்யலாம். ஏனெனில், கூட்டணியில் புதிய கட்சி இணைந்து இருப்பதால் அதிக இடங்களை கொடுக்க முடியாது என்பதை சொல்லும் விதமாக இது அமைந்து இருப்பதாகவும் தெரிகிறது. விஜய் கட்சி பெரிய அளவில் வாக்குகளை பிரிக்கலாம் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது. பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை 500, 1000 வாக்குகள் கூட முடிவு செய்யலாம். எனவே எந்த ஒரு சிறு வாய்ப்பையும் விடக்கூடாது என்ற நோக்கத்தின் அடிப்பட்டையில் தேமுதிகவை தங்கள் கூட்டணிக்கு திமுக இணைத்து இருப்பதாக தெரிகிறது. தேமுதிக கட்சி தொடங்கிய பிறகு முதல் முறையாக திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட உள்ளது.
அதிரடி முடிவுக்கு என்ன காரணம்?
அதிமுக கூட்டணியில் கடந்த முறை போட்டியிட்டு தேமுதிக படுதோல்வி அடைந்தது. போதாக்குறைக்கு ராஜ்யசபா சீட் விவகாரத்திலும் கருத்து மோதல் ஏற்பட்டது. இந்த முறையும் ராஜ்யபா சீட் கொடுக்க அதிமுக தயக்கம் காட்டியதாக சொல்லப்படுகிறது. அதேபோல தேமுதிக நிர்வாகிகளும் வெற்றி வாய்ப்புள்ள கூட்டணியாக இருக்க வேண்டும், அதற்கு திமுக கூட்டணியில் இணைவதே பொருத்தமாக இருக்கும் என்று வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே பிரேமலதா விஜயகாந்த் இந்த முடிவை எடுத்து இருக்கலாம் எனத்தெரிகிறது.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
மருமகன் கொலை...??? மாமனார் கைது...!!!
தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் விரைவில் கடும் போட்டி....!!!
எனக்கு பத்து இல்லைங்க...!! ரெண்டு தான் வாங்கினேன்... புலம்பிய மத்திய முன்னாள் அமைச்சர்...!!!
தி மு க வைத்த செக் - தே மு தி கவிற்கு சாதகமா ? காங்கிரசுக்கு பாதகமா ? ஸ்டாலிலின் அதிரடி முடிவு !
அப்பாடா ஆறு புருஷன்....!!! தற்போது ஜெயிலில்...!!!