by admin on | 2026-02-19 09:46 PM
சென்னையில் தேனாம்பேட்டை பஸ் ஸ்டாப் அருகே தனது காரில் காத்திருந்த மணி என்ற தொழிலதிபரை, குன்றத்தூரை தீபிகா லட்சுமி என்பவர் அணுகியுள்ளார்.இவர்கள் முதலில் பார்வை பரிமாற்றம் செய்து, பின்பு சிரிப்பு மூலம் தொடங்கி அருகில் உள்ள இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். தீபிகா தன்னை அனாதை என்றும், ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று அவர் இரக்கப்படும் அளவுக்கு பேசியுள்ளார். அதன் பின்னர் இருவரும் போன் நம்பரை பரிமாறிக்கொண்டு, அடுத்த நாள் ஈசிஆர் சாலை பகுதியில் டேட்டிங் சென்றுள்ளனர். கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு பப்பில் மது அருந்திய பிறகு அருகிலுள்ள ஹோட்டலில் அறை எடுத்து உல்லாசமாக இருந்துள்ளனர்.அதன்பிறகு மது போதையில் ஆழ்ந்து தூங்கிவிட்டார். மணி தூங்கியபோது, தீபிகா அவரது கழுத்திலிருந்த 10 சவரன் தங்கச் சங்கிலியை எடுத்துக்கொண்டு தப்பியோடிவிட்டார்..அதிகாலையில் படுக்கையில் இருந்து எழுந்த மணி, தங்கச் சங்கிலி காணாமல் போனதை அறிந்துள்ளார். மேலும், தீபிகா காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். அவரது போன் எண்ணைத் தொடர்புகொள்ள முயன்றபோது சுவிட்ச் ஆஃப் ஆக இருந்தது. இதையடுத்து மணி தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.போலீசார் இது குறித்த புகாரின் பேரில் தீபிகாவின் மொபைல் எண்ணின்.லொகேஷன் கண்டறிந்த போலீசார், குன்றத்தூரில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று கைது செய்தனர்.போலீசார் விசாரணையில், தீபிகா தனது கணவர் சதீஷுடன் சேர்ந்து இதுபோன்ற ஹனி டிராப் செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்ததாக ஒப்புக்கொண்டார். தீபிகாவுக்கு ஏற்கனவே 5 திருமணம் செய்துள்ளார் என்பது தெரிந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இது போன்று ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கொண்டு அவர்களிடமிருந்து நகைகள், பணம் ஆகியவற்றை ஏமாற்றி வாங்கிய பிறகு விவாகரத்து பெற்றுள்ளார்.தற்போது 6-ஆவது கணவரான சதீஷுடன் வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு 4 வயது மகளும் உள்ளார்.தான் திருடின 10 சவரன் நகையை விற்று, 6-வது கணவர் சதீஷுக்கு KTM பைக் வாங்கிக் கொடுத்ததாக தீபிகா தெரிவித்துள்ளார். போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!