by admin on | 2026-02-19 09:27 PM
உங்களுக்கு இரண்டு மனைவிகள் ... அண்ணாமலை கேட்ட அந்த ஒரு கேள்வி... ஷாக் ஆன டி ஆர் பாலு...
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட DMKFiles தொடரபாக திமுக எம்பி டி ஆர் பாலு தொடர்ந்த வழங்கில் இதற்கு முன்பு ஆஜரான அண்ணாமலை, டி ஆர் பாலுவிடம் குறுக்கு விசாரி செய்வதற்காக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து சிறப்பு அனுமதி பெற்று இருந்தார். இதனை தொடர்ந்து இந்த வழக்கில் வழக்கறிஞருக்கு பதிலாக அண்ணாமலையை ஆஜராகி குறுக்கு விசாரணை செய்தார்.
அப்போது அண்ணாமலை, நீங்கள் மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, இந்திய அரசு நிறுவனமான SCI க்கு கப்பல் வாங்கிய நேரத்தில், உங்களுக்கும் தனியாக பத்து கப்பல் வாங்கிவிட்டதாக அப்போது அமைச்சராக இருந்த முக அழகிரி கூறியிருக்கிறாரே? என கேள்வி எழுப்பிய போது,
அதற்கு முக அழகிரி விஷயம் தெரியாமல் பேசியிருப்பார். என தெரிவித்த டி ஆர் பாலு, ரெண்டே ரெண்டு கப்பல் மட்டும் தான் வாங்கினேன். ரேட் கம்மி இருந்தது, அதனால வாய்ப்பு வீணாகக்கூடாது என்று வாங்கி போட்டுட்டேன் என தெரிவித்து இருக்கிறார் டி ஆர் பாலு, இதனை தொடர்ந்து அடுத்த கேள்வியை எழுப்பிய அண்ணாமலை,
2004 -2009 UPA 1 ஆட்சியில் நீங்கள் அடித்த ஊழல் காரணமாகத்தான் உங்களுக்கு UPA 2 அமைச்சரவையில் உங்களுக்கு இடம் கொடுக்கவில்லை என்று அழகிரி சொல்லி இருக்கிறாரே? என கேட்ட போது, அதற்கு முக அழகிரி அவ்வாறு சொல்லவில்லை, சொல்லவும் தகுதி இல்லை என டி ஆர் பாலு பதில் அளித்ததாக கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து அடுத்து மீனம் ஃபிஷரீஸ், தேவி கிரானைட்ஸ், கிங்ஸ் இந்தியா கெமிக்கல்ஸ் இந்த மூன்று நிறுவனங்களும் நீங்கள் மக்களவை எம்.பி., கேபினெட் மினிஸ்டராக இருந்த காலகட்டத்தில்தான் தொடங்கப்பட்டதுதானே? என அண்ணாமலை எழுப்பிய கேள்விக்கு, ஆம், சரிதான். அந்த காலம் ஸ்டார்ட்அப் ஃபிரெண்ட்லி காலம் போல இருந்துச்சு என டி ஆர் பாலு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து அடுத்து உங்களுக்கு ரேனுகா தேவி மற்றும் பொற்கொடி என்று இரண்டு மனைவிகள், டி.ஆர்.பி. ராஜ்குமார், டி.ஆர்.பி. ராஜா, செல்வகுமார் என்று மூன்று மகன்கள், காஞ்சனாதேவி, மனோன்மணி என்று இரண்டு மகள்கள் உள்ளன என்பது? உண்மைதானே என அண்ணாமலை எழுப்பிய கேள்விக்கு உண்மை தான். குடும்பம் பெரியது என பதில் அளித்து இருக்கிறார் டி ஆர் பாலு.
இதனை தொடர்ந்து, உங்கள் மனைவிகள் ரேனுகா தேவி, பொற்கொடி வருமானவரி தாக்கல் செய்கிறார்களா? என அண்ணாமலை கேள்வி எழுப்பிய போது, அதற்கு தாக்கல் செய்கிறார்கள். ஆனால் எப்போதிருந்து என்று எனக்குத் தெரியாது. அவர்களது கல்வித் தகுதி கூட ஞாபகமில்லை என டி ஆர் பாலு பதில் அளித்து இருக்கிறார்.
அடுத்ததாக உங்கள் மூன்று மகன்கள், இரண்டு மகள்களும் தனித்தனியே தொழில் செய்து வருமானவரி தாக்கல் செய்கிறார்களா? என அண்ணாமலை எழுப்பிய கேள்விக்கு ஆம், தாக்கல் செய்கிறார்கள். ஆனால் அதைப் பற்றி எனக்கு தெரியாது. என டி ஆர் பாலு பதில் அளித்து இருக்கிறார்,
மேலும் மாயா மோட்டார்ஸ், கோல்டன் வாட்ஸ், ஜியோ ப்ராபர்டீஸ், லைவ் கார்ஸ், சக்ரா வுட்ஸ், அரிஸ்டோ டெலிமீடியா, ட்வைஸ் ஹோல்டிங், அரிஸ்டோ டெலினெட் — இவை அனைத்தும் உங்கள் மகன்களால் தொடங்கப்பட்டதல்லவா? என அண்ணாமலை எழுப்பிய கேள்விக்கு அதைப் பற்றி எனக்குத் தெரியாது… தெரியாது… தெரியாது என பதில் அளித்து இருக்கிறார் டி பாலு என கூறப்படுகிறது.
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!