by satheesh on | 2026-02-19 04:43 PM
தமிழகத்திலேயே முதன்முறை: புதிய சட்டத்தின் கீழ் திருவெண்ணெய்நல்லூரில் வழக்குப்பதிவு - மீட்பு முகமை மேலாளர் கைது!
விழுப்புரம் மாவட்டத்தில் கடன் வசூல் என்ற பெயரில் அத்துமீறிய தனியார் நிதி நிறுவன மேலாளர் மீது புதிய சட்டத்தின் கீழ் காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
திருவெண்ணெய்நல்லூர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று JCB வாங்கியுள்ளார். தவணை செலுத்தாத காரணத்தால், கடந்த 13.02.2026 அன்று முறையான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் வாகனத்தைப் பறிமுதல் செய்ய முயன்ற மேலாளர் மற்றும் ஊழியர்களால் மனமுடைந்த அந்த நபர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக் கொண்டுவரப்பட்ட "தமிழ்நாடு பணக் கடன் வழங்கும் நிறுவனங்கள் (கட்டாய நடவடிக்கைகளை தடுத்தல்) சட்டம் 2025"-இன் கீழ், தமிழகத்திலேயே பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கு இதுவாகும். இதன் கீழ் மீட்பு முகமை மேலாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடன் வசூலிக்கும் நிறுவனங்கள் சட்டத்தை மீறக்கூடாது. பொதுமக்கள் யாரேனும் கடன் வழங்குபவர்களால் துன்புறுத்தப்பட்டால் உடனடியாக காவல்துறையை அணுகுமாறு விழுப்புரம் மாவட்ட காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
இணை ஆசிரியர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!