by satheesh on | 2026-02-19 10:51 AM
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் மூளைச்சாவடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் ;
இரண்டு கிட்னி, கல்லீரல், கண்கள் பலருக்கு புதிய வாழ்வு
திருநெல்வேலி மாவட்டம் ஆவாரக்குளம் பகுதியை சேர்ந்த மகேஷ் (31) என்பவர் சாலை விபத்தில் மூளைச்சாவடைந்த நிலையில், அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டு பலருக்கு புதிய வாழ்வு அளிக்கப்பட்டது. மகேஷ், குமரி மாவட்டம் மருங்கூர் பகுதியை சேர்ந்த இளம் பெண்ணை கடந்த எட்டு மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டார். கடந்த திங்கட்கிழமை மதியம் காவல்கிணறு பாலம் பகுதியில் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். பின்னர் அவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் தீவிர சிகிச்சையின்போதும் அவர் மூளைச்சாவடைந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரது மனைவி உடல் உறுப்புகள் தானத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்படி, இரண்டு கிட்னிகளில் ஒன்று திருச்சிக்கும், மற்றொன்று காரைக்குடிக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. கல்லீரல் திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும், கண்கள் நாகர்கோவிலில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. உடல் உறுப்புகள் விரைவாக சென்றடைய போலீசார் போக்குவரத்தை சீரமைத்து சிறப்பு ஏற்பாடுகள் செய்தனர். இளம் வயதிலேயே உயிரிழந்த மகேஷின் உடல் உறுப்பு தானம் மனிதாபிமானத்தின் உயர்ந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
இணை ஆசிரியர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!