by Vignesh Perumal on | 2026-02-18 02:39 PM
"மாற்றத்தை விரும்பும் மக்களுக்கான மாநாடு" என்ற பெயரில் நாம் தமிழர் கட்சி சார்பில் வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி திருச்சியில் பிரம்மாண்ட அரசியல் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் அக்கட்சி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்யவுள்ளார். 21-02-2026 (சனிக்கிழமை), மாலை 4:00 மணி முதல் ஆலம்பட்டிபுதூர், திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை. செந்தமிழன் சீமான் (தலைமை ஒருங்கிணைப்பாளர், நா.த.க) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக அரசியல் கட்சிகள் தேர்தலுக்குச் சில நாட்களுக்கு முன்பே வேட்பாளர்களை அறிவிக்கும். ஆனால், நாம் தமிழர் கட்சி தேர்தலுக்கு ஓராண்டிற்கு முன்னரே 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் இறுதி செய்து, அவர்களை ஒரே மேடையில் மக்கள் முன் நிறுத்தத் திட்டமிட்டுள்ளது.
"இது வெறும் அரசியல் மாநாடு அல்ல; இது ஒரு புரட்சி. தீய ஆட்சிமுறை ஒழியவும், தூய ஜனநாயகம் மலரவும் விரும்பும் மக்களுக்கான திருவிழா" - சீமான்.
இம்முறையும் 50% ஆண்கள் மற்றும் 50% பெண்களுக்குச் சமமான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மாநாட்டில் கட்சியின் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முக்கியத் தேர்தல் அறிக்கைகள் மற்றும் ஆட்சிக் கொள்கைகள் குறித்து சீமான் விரிவாக உரையாற்றவுள்ளார்.
இந்த மாநாட்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியிலிருந்து இலட்சக்கணக்கான கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
திராவிட மற்றும் தேசியக் கட்சிகளுக்கு மாற்றாகத் தங்களை முன்னிறுத்தும் விதமாக இந்த மாநாட்டை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைத்துள்ளது.
திருச்சி ஆலம்பட்டிபுதூர் பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டுத் திடல் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான 'கால்கோல் விழா' கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி நடைபெற்றது. தற்போது பந்தல் அமைத்தல், குடிநீர் மற்றும் வாகன நிறுத்த வசதிகள் உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்த மாநாடு 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில் நாம் தமிழர் கட்சியின் செல்வாக்கை நிரூபிக்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
மகளே அம்மாவை கொல்ல முயன்ற கொடூரம் ! காதலனுடன் மகள் கைது !! அதிர்ச்சி சம்பவம் !!!
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!
ஸ்டாலின் ஓபிஎஸ் க்கு கொடுத்த அசைவ்மென்ட் - நிறைவேற்றுவாரா ? ஓபிஎஸ் ! களம் மாறும் அரசியல் !!
பல இடங்களில் அதிமுக டெபாசிட் இழக்கும்? லயோலா கருத்துக்கணிப்பில் பகீர் ! அதிமுகவினர் அதிர்ச்சி !!