by Vignesh Perumal on | 2026-02-18 02:20 PM
திண்டுக்கல் அருகே காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த மாநகராட்சி ஒப்பந்ததாரரின் தந்தை, இன்று காலை கிழக்கு பாலமரத்துபட்டி பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து தாலுகா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சிவபெருமாள். இவர் திண்டுக்கல் மாநகராட்சி ஒப்பந்ததாரராகப் பணிபுரிந்து வரும் 'பாத்ரூம்' முருகன் என்பவரின் தந்தை ஆவார். சிவபெருமாள் நேற்று திடீரென வீட்டில் இருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், இது குறித்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில், தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவபெருமாளைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், இன்று காலை திண்டுக்கல் அருகே உள்ள கிழக்கு பாலமரத்துபட்டி பகுதியில் முதியவர் ஒருவரின் சடலம் கிடப்பதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அது காணாமல் போன சிவபெருமாள் என்பதை உறுதி செய்தனர்.
போலீசார் சிவபெருமாளின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிவபெருமாள் எப்படி உயிரிழந்தார்? இது தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
மாநகராட்சி ஒப்பந்ததாரரின் தந்தை காணாமல் போய் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் திண்டுக்கல் மேட்டுப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே உயிரிழப்புக்கான முழுமையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
வைகை அணையை தூர்வார வேண்டும் வி ஆர் ராஜன் கோரிக்கை....!!!
கஞ்சா பறிமுதல் எட்டு பேர் கைது....!!!
வங்கியில் கோடிக்கணக்கில் மோசடி - ஒருவர் கைது ! பெண் உட்பட 6 பேரைத் தேடும் போலீஸ் !!
பத்மநாபபுரம் அரண்மனை - பழமை மாறாமல் புதுப்பிக்க கோரிக்கை. !
போதை மாத்திரை விற்பனை - 3 பேர் கைது ! பொறி வைத்து பிடித்த போலீஸ் !!