by satheesh on | 2026-02-17 10:27 PM
விபச்சாரத்தில் மகளை தொல்லை துணிந்தத் தாய் - 4 கணவரும் பிரிந்த பரிதாபம்! ஆத்திரத்தில் தாயைக் கொன்ற மகள் !!
பெற்ற மகளுக்கு 4 பேருடன் திருமணம் செய்து வைத்துள்ளார் ஒரு தாய்.. போதாக்குறைக்கு விபச்சாரத்திலும் தள்ளியுள்ளார் அந்த பணப்பேய். தன் அம்மாவை பற்றி யாரிடமும் புகார் சொல்ல முடியாத நிலையில், மனப்புழுக்கத்தில் தவித்து வந்த அந்த மகள், இறுதியில் யாருமே எதிர்பார்க்காத முடிவை தற்போது எடுத்துவிட்டார்.. இந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பெரும் அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.. குண்டூர் மாவட்டத்தில் சட்டெனப்பள்ளி என்ற பகுதி உள்ளது. இங்கு வசித்து வருபவர் ரமாதேவி.. இவருக்கு ஒரு மகன், லட்சுமி என்ற மகள் இருக்கிறார்கள்..
ஓடிப்போன மகன் :
இவரது கணவர் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார்.. இந்த மரணம் அப்போதே பல சந்தேகங்களை கிளப்பிவிட்டதாம்.. காரணம், ரமாதேவியின் நடத்தையில் கணவருக்கு நிறைய சந்தேகங்கள் இருந்துள்ளன.. இந்த சந்தேகத்தினால் தம்பதி இருவரும் தகராறும் செய்து வந்துள்ளனர்.. பிறகு திடீரென ஒருநாள் கணவர் இறந்துவிட்டார்.. ரமாதேவியின் தவறான போக்கினால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக சொல்கிறார்கள்.. தந்தை மறைவுக்கு பிறகு ரமாதேவியின் மகனும் எங்கோ போய்விட்டாராம்.. இதற்கு பிறகு மகள் லட்சுமிக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு விஜயவாடாவை சேர்ந்த சீனிவாசராவ் என்பவரை திருமணம் செய்து வைத்துள்ளார் ரமாதேவி..
பணப்பேய் - பாவம் லட்சுமி :
இதனால் ரமாதேவி மட்டும் சட்டெனப்பள்ளியில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 7ம்தேதி ரமாதேவி தனது வீட்டில் தீயில் கருகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.. இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், ரமாதேவியின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.. பிறகு வழக்கு பதிவு விசாரணை நடத்தியபோதுதான், ரமாதேவியை இப்படி கொடூரமாக கொன்றதே அவரது மகள் லட்சுமிதான் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் லட்சுமியை கைது செய்தனர். விசாரணையும் மேற்கொண்டனர்.. அப்போது லட்சுமி தந்த வாக்குமூலத்தை கேட்டு ஆந்திர போலீசார் அதிர்ச்சியடைந்துவிட்டார்களாம். லட்சுமி தன்னுடைய வாக்குமூலத்தில் "நான் குழந்தையாக இருந்தபோதே இருந்தே, என்னுடைய அம்மா ரமாதேவியின் நடத்தை சரியில்லை. இதனால் என்னுடைய அப்பா தற்கொலை செய்து கொண்டார்...
விபச்சாரத்தில் தள்ள வந்த தாய் :
அப்பா இறந்தும்கூட, அம்மாவின் நடத்தை மாறவில்லை... தொடர்ந்து தவறான நடத்தையில் இருந்து வந்தார். இதனால் எனது அண்ணனும், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்... என் அம்மாவின் தவறான நடத்தை காரணமாக எனக்கு இதுவரை 4 முறை திருமணம் செய்துகொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.. தாயிடமிருந்து தப்பித்து எங்காவது நிம்மதியாக வாழலாம் என்று நான் ஒருவரை திருமணம் செய்வேன்.. சிறிது நாளிலேயே என் அம்மாவின் நடத்தையை பார்த்துவிட்டு, என்னை விட்டு கணவர் பிரிந்து சென்றுவிடுவார்.. தாயின் நடத்தை காரணமாகதான் என்னை பிரிந்து செல்வதாக 4 கணவர்களுமே சொல்லி விட்டனர். இதனால் 4 திருமணம் செய்தும் தனிமையில் வசிக்கும் சூழல் வந்தது.. அப்போதும் என்னுடைய அம்மா என்னிடம், விபச்சாரம் செய்யுமாறு வற்புறுத்த துவங்கினார்.. இதற்கு நான் மறுத்தேன்..
மாத்திரை பால் : அதனால் என்னை துன்புறுத்த துவங்கினார்.. விபச்சாரத்தில் ஈடுபட்டால் எனது குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால், அந்த தவறை செய்ய எனக்கு விருப்பமில்லை.. மாறாக, என்னுடைய அம்மாவையே கொலை செய்ய முடிவு செய்தேன். அதன்படி கடந்த 8ம் தேதி, கிச்சனில் பால் காய்ச்சி, அதில் மயக்க மாத்திரைகளை கலந்து என் அம்மாவுக்கு கொடுத்தேன். அதை குடித்த அவர், சிறிது நேரத்தில் தூங்கிவிட்டார்... பிறகு பெட்ரோல் வாங்கி வந்து தூங்கிக்கொண்டிருந்தவர் மீது ஊற்றி தீ வைத்து எரித்து கொன்றேன்" என்று வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இப்போது லட்சுமி கைதாகி உள்ளார்.. விசாரணையும் நடக்கிறது. பாவம் லட்சுமியின் நிற்கதியாய் நிற்கும் குழந்தைகள் !
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!
ஸ்டாலின் ஓபிஎஸ் க்கு கொடுத்த அசைவ்மென்ட் - நிறைவேற்றுவாரா ? ஓபிஎஸ் ! களம் மாறும் அரசியல் !!
பல இடங்களில் அதிமுக டெபாசிட் இழக்கும்? லயோலா கருத்துக்கணிப்பில் பகீர் ! அதிமுகவினர் அதிர்ச்சி !!
சிறுத்தை தாக்கி ஆடுகள் பலி...??? பொதுமக்கள் அச்சம்....!!!