by admin on | 2026-02-17 04:08 PM
தேனி மாவட்டம் உலகம் உங்கள் கையில் திட்டத்தின்கீழ் இதுவரை 10,469 கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில் 16.02.2026 அன்று
உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள், தேனி பாராளுமன்ற உறுப்பினர் திரு.தங்க தமிழ்செல்வன் அவர்கள், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.எஸ்.சரவணகுமார் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் மடிக்கணினிகளை வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, மாணவர்களின் நலன் மற்றும் முன்னேற்றத்தைக் கருத்திற்கொண்டு
தமிழ்ப்புதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், முதல் தலைமுறை பட்டமளிப்பு (FG) திட்டம், சமூக நீதி விடுதிகள் போன்ற பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
அதனடிப்படையில் மாணவர்களின் கைகளில் எதிர்காலம் உள்ளது என்பதையும், அதை மேம்படுத்தும் விதமாக இன்றைய இளைய தலைமுறையினரின் திறன்மேம்பாடு மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக அரசு, அரசு நிதி உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும்
"உலகம் உங்கள் கையில்" திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கடந்த 05.01.2026 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தேனி மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு நிதி உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மடிக்கணினிகளை வழங்கினார். தொடர்ந்து கல்லூரி வாரியாக மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தில்
இதுவரை மொத்தம் 10,469 கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது.
விபச்சாரத்தில் தள்ளத் துணிந்த தாய் - ஆத்திரத்தில் தாயை கொலை செய்த மகள் ! பரிதவிக்கும் குழந்தைகள் !!
மாமியாரும் மருமகனும் நேரடி மோதலா ? அதிமுகவில் இணைந்து அதிரடி.!
உலகம் உங்கள் கையில் மடிக்கணினி வழங்கிய கலெக்டர் ரஞ்ஜீத் சிங்...!!
போதைப் பொருள் பறிமுதல் - தம்பதி உட்பட 3 பேர் கைது ! போலீஸ் அதிரடி !!
திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் ஆய்வு....!!!!