by satheesh on | 2026-02-17 02:35 PM
கேரளா மலப்புரத்தில் மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல் ! கோடிகள் மதிப்புள்ள எம்.டி.எம்.ஏ உடன் தம்பதியர் உட்பட 3 பேர் கைது..!!
கேரளா : மலப்புரம் மாவட்டத்தை அதிரவைத்த இன்னொரு பெரிய போதைப்பொருள் பறிமுதல். University of Calicut அருகே உள்ள ஒரு வீட்டை மையமாகக் கொண்டு செயல்பட்டதாக கூறப்படும் போதைப்பொருள் சங்கிலியை போலீஸார் சிதைத்துள்ளனர். சுமார் ஒரு கோடி ரூபாய் சந்தை மதிப்புள்ள 1.16 கிலோ எம்.டி.எம்.ஏ மற்றும் ஆவணமற்ற 21 லட்சம் ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. 53 வயதான அசீஸ், அவரது மனைவி 50 வயதான கமருன்னீசா, அசீஸின் மகன் ஜாசிரின் நண்பர் சலாவுத்தீன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். அசீஸின் மகன் ஜாசிர் தற்போது தலைமறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.போதைப்பொருள் எடைக்கு பயன்படுத்தப்பட்ட 5 மின்தராசுகள், ரகசிய தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட வாக்கி-டாக்கி, கேஸ் பர்னர் உள்ளிட்ட பொருட்களும் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன. மலப்புரம் மாவட்ட போலீஸ் தலைவர் ஆர்.விஸ்வநாத் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட திடீர் சோதனையிலேயே இந்த பெரிய கும்பல் சிக்கியது. மாணவர்களையும், இளைஞர்களையும் குறிவைத்து பெருமளவில் போதைப்பொருள் விற்பனை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இளைய தலைமுறையை பாதிக்கும் இத்தகைய போதை மாஃபியாக்களுக்கு எதிராக எச்சரிக்கையாக இருங்கள். ஏதேனும் சந்தேகத்திற்கிடமான செயல்கள் தெரிந்தால் உடனடியாக போலீசுக்கு தகவல் அளிக்க அறிவுறுத்தியுள்ளனர்.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!