by satheesh on | 2026-02-17 11:42 AM
நகை வாங்குவது போல் வரவழைத்து வியாபாரியிடம் வழிப்பறி; தட்டி தூக்கிய போலீஸ் :
கரூரை சேர்ந்த வைர வியாபாரியை வரவழைத்து ஏமாற்றி வழிப்பறி செய்த கும்பலை போலீசார் இரண்டே நாட்களில் வளைத்து பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் அருணாச்சலம் நகரை சேர்ந்தவர் நகை வியாபாரியான லோகநாதன்(49). இவரிடம் வைர நகைகள் இருப்பதை அறிந்த பல குற்ற வழக்குகளில் சிக்கியுள்ள ஒரு கும்பல் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒருவர் மூலம் லோகநாதனுக்கு பேசி காரைக்குடி எம்.எல்.ஏ அலுவலகம் அருகே உள்ள ஒரு தனியார் இடத்திற்கு அழைத்துள்ளனர். தன்னிடம் உள்ள நகைகளை விற்க ஒரு காரில் ஓட்டுநர் சங்கருடன் காரைக்குடி சென்ற லோகநாதனை ஒரு அறைக்கு அழைத்துச் சென்று நகைகளைப் பார்த்த பிறகு அதன் விலை ரூ.30 லட்சம் என்று சொல்ல ஆனால் ரூ.20 லட்சத்தில் இருந்து கேட்டவர்கள் பிறகு ரூ.24 லட்சம் தருவதாக கூறி மாலை வரை காலம் கடத்திக் கொண்டிருந்துவிட்டு நன்றாக இருட்டிய நேரத்தில் பணம் இல்லை நீங்க போங்க என்று சொல்லி அனுப்பி உள்ளனர். வைர நகையை விற்க முடியாமல் தான் வந்த காரில் புதுக்கோட்டை வழியாக சென்ற போது ஆள் நடமாட்டம் இல்லாத பெருஞ்சுனை குளம் அருகே செல்லும் போது பின்னால் வந்த ஒரு கார் லோகநாதன் சென்ற காரில் உரசி பக்கவாட்டு கண்ணாடி உடைய உடனே இரு கார்களும் நிறுத்தப்பட்டது. இடித்த காரில் இருந்து இறங்கிய 7 பேர் முதலில் மிதமாக பேசியவர்கள் சிறிது நேரத்தில் உன் பையில் உள்ள வைர நகையை கொடு இல்லன்னா பெட்ரோல் ஊற்றி கொளுத்திடுவோம் என்று பெட்ரோல் பாட்டிலுடன் நிற்க, தன் கையில் இருந்த வைர நகை பையை பறித்துக் கொண்டு சென்றுவிட்டனர் அந்த 7 பேர் கும்பல். அதன் பிறகு லோகநாதன் திருக்கோகர்ணம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க உடனே மாவட்ட காவல் கண்காணிப்பாளர அபிஷேக்குப்தா உத்தரவின் பேரில் டிஎஸ்பி பிருந்தா தலைமையிலான கிரைம் டீம் போலீசாரிடம் வைர நகை கொள்ளையர்களை பிடிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. கிரைம் போலீசார் தொடக்கத்தில் இருந்து விசாரித்த பிறகு ஆங்காங்கே உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து நகை வியாபாரியின் காரை பின் தொடர்ந்து ஒரு நம்பர் பிளேட் இல்லாத கார் வருவதை கண்டுபிடித்து அதன் அடையாளங்களையும் சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் அடையாளங்களையும் வைத்து விசாரணை நடத்தினர். ராமநாதபுரம் மாவட்டத்தில் பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய முகேஷ் தான் இந்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டது தெரிந்தது. இதேபோல பல காவல் நிலையங்களில் குற்றப்பின்னணி பட்டியலில் உள்ள தனது உறவினர்களை தேர்வு செய்து ஒன்றாக இணைந்து நகை வியாபாரியை வரவைத்து விலை பேசுவதுபோல பேசி நீண்ட நேரம் காத்திருக்க வைத்து, பின்னர் வழியில் காரை மோதி கொள்ளை அடித்துச் சென்றதும் தெரிய வந்தது. இதில் முகேஷ், மாயகிருஷ்ணன், சுரேஷ் என 3 பேரை தூக்கிய போலீசார் அவர்களிடம் இருந்து வைர நகைகள், செல்போன்கள், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து தலைமறைவாக உள்ள மீதமுள்ள 4 பேரை தேடி வருகின்றனர். வைர நகை கொள்ளை நடந்து 2 நாட்களுக்குள் கொள்ளையர்களை பிடித்து கொள்ளை போன நகைகள் மீட்ட டிஎஸ்பி தலைமையிலான கிரைம் டீம் போலீசாரை மாவட்ட எஸ்பி பாராட்டினார்.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
விபச்சாரத்தில் தள்ளத் துணிந்த தாய் - ஆத்திரத்தில் தாயை கொலை செய்த மகள் ! பரிதவிக்கும் குழந்தைகள் !!
மாமியாரும் மருமகனும் நேரடி மோதலா ? அதிமுகவில் இணைந்து அதிரடி.!
உலகம் உங்கள் கையில் மடிக்கணினி வழங்கிய கலெக்டர் ரஞ்ஜீத் சிங்...!!
போதைப் பொருள் பறிமுதல் - தம்பதி உட்பட 3 பேர் கைது ! போலீஸ் அதிரடி !!
திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் ஆய்வு....!!!!