| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

பூட்டிய வீடுகளில் - கன்னம் வைத்து பட்டப் பகலில் நூதன திருட்டு - கைவரிசை காட்டி வந்த பெண் கைது !

by satheesh on | 2026-02-16 11:14 AM

Share:


பூட்டிய வீடுகளில்  - கன்னம் வைத்து  பட்டப் பகலில்  நூதன திருட்டு  - கைவரிசை காட்டி வந்த பெண் கைது  !

வீட்டை பூட்டி சாவியை வெளியே வைத்த ஓனர்.. பின்னாடியே சென்ற பெண்.. இறுதியில் காத்திருந்த பயங்கர திரில்  :  பூட்டிய வீடுகளைக் குறிவைத்து நூதன முறையில் திருடி வந்த பெண் ஒருவரைப் பெரம்பூர் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பெரம்பூர் வெங்கட்ராமன் தெருவில் வசிக்கும் சுகுமாரன் என்பவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டைப் பூட்டிவிட்டு, அதன் சாவியை வழக்கம்போல வீட்டின் வெளியே மறைவான ஓரிடத்தில் வைத்துவிட்டுச் சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர், அந்தச் சாவியைப் பயன்படுத்தி வீட்டிற்குள் புகுந்து பணம் மற்றும் வெள்ளிப் பொருட்களைத் திருடிச் சென்றுள்ளார். பாதிக்கப்பட்ட சுகுமாரன் அளித்த புகாரின் பேரில், செம்பியம் குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், ஒரு பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடுவது தெரியவந்தது. அந்தப் பெண்ணைப் பிடித்து விசாரித்தபோது, அவர் ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சோரி பகுதியைச் சேர்ந்த இந்துமதி (35) என்பது உறுதியானது. அவரிடமிருந்து திருடப்பட்ட ரொக்கப் பணம் மற்றும் வெள்ளிப் பொருட்களைப் போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இந்துமதி, ரயில் மூலம் சென்னைக்கு வந்து ஆள் நடமாட்டம் இல்லாத மற்றும் சிசிடிவி வசதி இல்லாத வீடுகளைக் கண்காணிப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளார். குறிப்பாக, அவசரத்தில் வீட்டைப் பூட்டிவிட்டுச் சாவியை வாசற்படிக்கு அடியிலோ அல்லது ஜன்னல் ஓரத்திலோ மறைத்து வைப்பவர்களைக் குறிவைத்துத் திருடுவதில் இவர் கைதேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. இவருக்கு ஏற்கனவே அரக்கோணம், போளூர் மற்றும் மதுரவாயல் ஆகிய பகுதிகளில் நடந்த பல திருட்டுச் சம்பவங்களில் தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் வீட்டைப் பூட்டிவிட்டுச் செல்லும்போது சாவிகளை மறைவான இடங்களில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அறிமுகமில்லாத நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாகக் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். பிடிபட்ட இந்துமதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


இணை ஆசிரியர்  : N. சதீஷ்குமார்,  பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment