| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

கோரவிபத்து..! இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி..! இருவர் படுகாயம்..!

by Vignesh Perumal on | 2026-02-15 06:09 PM

Share:


கோரவிபத்து..! இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி..! இருவர் படுகாயம்..!

பழனி திண்டுக்கல் சாலையில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், இருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள திண்டுக்கல் சாலை, ஒரு தனியார் திருமண மண்டபம் அருகே இன்று இந்த விபத்து நிகழ்ந்தது. அந்தச் சாலையில் அதிவேகமாக வந்த இரண்டு இருசக்கர வாகனங்கள், எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.

மோதிய வேகத்தில் வாகனங்களில் இருந்த இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இதில் அவர்களுக்கு தலை மற்றும் உடல் பாகங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

விபத்தில் சிக்கி திருமுருகன், சேக் படுகாயமடைந்தவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

விபத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர் மற்றும் வாகன ஓட்டிகள் உடனடியாக காயமடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பழனி நகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் தலைமையிலான போலீசார், விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீர்செய்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓட்டுநர்களின் கவனக்குறைவா அல்லது வாகனங்களின் அதிவேகமா என்பது குறித்து சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.










நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment