by satheesh on | 2026-02-15 11:49 AM
தவெக உறுதி; உடலை வாங்க சம்மதம் :
சேலம், விஜய் கூட்டத்தில் பங்கேற்றபோது உயிரிழந்த சுராஜ் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்குவதாக தவெகவினர் உறுதி. சுராஜ் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்பதாகவும் தவெகவினர் உறுதி சுராஜ் உடலை பெற்றுக்கொள்ள உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்
சேலம், விஜய் கூட்டத்தில் பங்கேற்றபோது உயிரிழந்த மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சுராஜ் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கினர். சுராஜ் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்பதாகவும் தவெகவினர் உறுதி சுராஜ் உடலை மகாராஷ்டிரா கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதியும் தாவெக சார்பில் ஏற்படுத்தப்பட்டது. உறவினர்கள் சுராஜ் உடலை பெற்று மகாராஷ்டிரா கொண்டு சென்றனர். ஏற்கனவே கடந்த ஒரு வருடத்திற்கு முன் இருதய அறுவை சிகிச்சை செய்தவர் என்று கூறப்படுகிறது. திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது. முன்னதாக மேற்படி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி சீட்டு எதுவும் வட இந்தியரான சுராஜ் பெறவில்லை என்பதும் காவல்துறையினர் அனுமதி இல்லாதவர்களை எப்படி அனுமதித்தினர் என்றும் கேள்வி எழுந்து உள்ளது. ஐந்தாயிரம் பேர் மட்டுமே அனுமதி என்று கூறிய நிலையில் கூடுதலாக போலீசார் எவ்வாறு அனுமதித்தனர் என்பதுதான் தற்போதைய கேள்வியாக உள்ளது.
வைரலாகும் செல்ஃபி !
முன்னதாக, சேலத்தில் விஜய் பங்கேற்ற தவெக மக்கள் சந்திப்பு கூட்டத்தில் வடமாநில இளைஞர் சூரஜ் மாரடைப்பால் உயிரிழந்த சோகம். கூட்டத்தில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் அருகே நின்று சூரஜ் செல்ஃபி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல்