by Vignesh Perumal on | 2026-02-15 10:41 AM
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகப்பட்டி செல்லும் சாலையில், குடிநீர் குழாய் உடைந்து பெருமளவிலான தண்ணீர் வீணாகி வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரியகுளம் - வடுகப்பட்டி செல்லும் சாலையில் பங்காளபட்டி பிரிவு அருகே, பிரதான குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள கசிவு காரணமாக கடந்த சில நாட்களாக குடிநீர் முறையாகப் பயன்படுத்தப்படாமல் சாலையோரங்களில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அப்பகுதி சேறும் சகதியுமாக மாறியுள்ளதுடன், விலைமதிப்பற்ற குடிநீர் வீணாகிக் கொண்டிருக்கிறது.
இப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
கிராமங்களில் 10 நாட்கள் முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
குடிநீருக்காக மக்கள் குடங்களை ஏந்திக்கொண்டு நீண்ட தூரம் அலைய வேண்டிய சூழல் உள்ள நிலையில், மறுபுறம் இப்படி ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் சாலையில் வீணாவதைக் கண்டு மக்கள் வேதனையுடன் புலம்பித் தவிக்கின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "குடிக்க ஒரு சொட்டு தண்ணீருக்கு வழியில்லாமல் தவிக்கும் போது, இப்படி ஆறாக ஓடும் குடிநீரைத் தடுக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது முகம் சுளிக்க வைக்கிறது" என ஆவேசத்துடன் தெரிவிக்கின்றனர்.
இந்த விவகாரத்தில் பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை (PWD) அதிகாரிகள் உடனடியாகத் தலையிட வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடைந்த குடிநீர் குழாய்களை உடனடியாகச் சீரமைக்க வேண்டும். குடிநீர் வீணாவதைத் தடுத்து, தட்டுப்பாடு நிலவும் பகுதிகளுக்குச் சீரான குடிநீர் விநியோகம் வழங்க வேண்டும்.
அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டங்களில் ஈடுபடவும் மக்கள் ஆலோசித்து வருகின்றனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்.
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!