by satheesh on | 2026-02-15 09:10 AM
திண்டுக்கல்லில் சப்-இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டியவர் உட்பட 2 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது ;
திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த விக்னு (எ) விக்னேஷ்(31) இவர் மீது 3 கொலை வழக்குகள் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன கடந்த மாதம் சவேரியார் பாளையம் பகுதியில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தவரை பிடிக்க சென்றபோது சப் இன்ஸ்பெக்டர் ஜான்சனை அரிவாளால் வெட்டி தப்பி ஓட முயன்ற போது நகர் DSP.கார்த்திக் துப்பாக்கியால் விக்னேஷின் காலில் சுட்டு பிடித்து சிகிச்சை அளிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.மேலும் திண்டுக்கல் மேட்டுப்பட்டி சேர்ந்த தளபதி(24) என்பவர் கடந்த மாதம் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் . இந்நிலையில் இந்த 2 பேரின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு எஸ்.பி.பிரதீப் பரிந்துரையின் பேரில் கலெக்டர் சரவணன் 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து நகர் தெற்கு காவல் நிலைய போலீசார் 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதி - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!