by admin on | 2026-02-14 09:04 PM
வைகை அணையின் அருகே பலசரக்கு கடை வைத்து சாதாரணமாக வாழ்ந்து வந்தார் வைகை அணை பகுதியைச் சேர்ந்த திரு இராஜ்குமார். தினமும் கடை, வாடிக்கையாளர், கணக்கு, சரக்கு வாங்குதல் என்று பிஸியான வாழ்க்கை. இருந்தாலும் மனத்தின் உள்ளே ஒரு புதிய கனவு விதை போட்டிருந்தது — “நாமும் ஒரு நாள் மீன் பண்ணை ஆரம்பிக்கணும்” என்ற ஆசை.
அந்த ஆசை வெறும் கனவாக இருக்கவில்லை. ஒருநாள் தீர்மானமாக மாறியது. சின்னமனூர் – கம்பம் சாலையோர வயல்வெளியில் ஒரு நிலத்தை தேர்வு செய்தார். பெரிய குழி வெட்டி, தண்ணீர் நிரப்பி, மீன் குஞ்சுகள் வாங்கி வளர்க்கத் தொடங்கினார்.
“சாதிக்கணும்” என்ற தீவிரம் இருந்தது.ஆனால் வாழ்க்கை எளிதாக இருந்ததில்லை.
மழை குறைவு, தீவனச் செலவு, தொழிலாளர் பிரச்சனை, சந்தை விலை ஏற்ற இறக்கம்… ஒன்றுக்கு மேல் ஒன்று சவால்கள். இதுவரை இருபது லட்சத்துக்கும் மேல் செலவழித்து போராடி கொண்டிருக்கிறார். “போட்ட முதலையே இன்னும் எடுக்க முடியல” என்று மனம் நொந்து சொன்னார்.
இன்று சின்னமனூர் பைபாஸ் சாலையில் சந்தித்தேன்.
“ஜீ, ஒரு டீ வாங்கலாம்…” என்று அழைத்தார்.
டீக் கடையில் நின்றபடி தனது கஷ்டங்களை பகிர ஆரம்பித்தார்.
அவரின் வார்த்தைகளில் நம்பிக்கை இருந்தது.
ஆனால் அந்த நம்பிக்கையின் பின்னால் சோர்வும் தெரிந்தது.
தினமும் வைகை அணை பகுதியில் இருந்து சின்னமனூர் வருவது சுலபமல்ல. போக்குவரத்து சிரமம், செலவு, நேரம் — எல்லாமே சவால். இருந்தாலும் “நான் தொடங்கின காரியம் வெற்றியடையணும்” என்ற உறுதி அவரை தினமும் பயணம் செய்ய வைக்கிறது.
இதற்கெல்லாம் மேலாக, இந்து எழுச்சி முன்னணியில் ஆண்டிபட்டி ஒன்றிய தலைவராக பொறுப்பு ஏற்று சமூக சேவையும் செய்து வருகிறார். தனிப்பட்ட சிரமங்கள் இருந்தாலும், பொதுச்சேவையில் பின்னடையாத அவர் உண்மையிலேயே பாராட்டுக்குரியவர்.
அவரது கஷ்டங்களை கேட்டு ஒரு பெருமூச்சு விட்டேன்.
“இறைவன் உழைப்பை வீணாக்க மாட்டார்” என்று ஆறுதல் கூறி பிரார்த்தனை செய்தேன்.
கனவு விதை போட்டவர்…இன்று போராடுகிறார்…
நாளை நிச்சயம் வெற்றி காண்பார் என்ற நம்பிக்கையுடன்.
உழைப்பும் உறுதியும் இருந்தால், தாமதம் இருக்கலாம்; தோல்வி இல்லை.
திரு இராஜ்குமார் அவர்களின் தொழில் சிறக்க இறைவனை வேண்டி பிரார்த்திக்கிறேன்.
வைகை அணையை தூர்வார வேண்டும் வி ஆர் ராஜன் கோரிக்கை....!!!
கஞ்சா பறிமுதல் எட்டு பேர் கைது....!!!
வங்கியில் கோடிக்கணக்கில் மோசடி - ஒருவர் கைது ! பெண் உட்பட 6 பேருக்கு போலீஸ் வலை வீச்சு. !!
பத்மநாபபுரம் அரண்மனை - பழமை மாறாமல் புதுப்பிக்க கோரிக்கை. !
போதை மாத்திரை விற்பனை - 3 பேர் கைது ! பொறி வைத்து பிடித்த போலீஸ் !!