by satheesh on | 2026-02-14 03:48 PM
தமிழகத்தில் பீகார் பார்முலா - அண்ணாமலை கண்ட்ரோலுக்கு வரும் CBI ... அமித்ஷா போடும் வியூகம்...
பிப்ரவரி 14ஆம் தேதி அமித்ஷா தமிழகம் வர இருக்கும் நிலையில் அதற்கு முன்பு பாஜகவில் பல மாற்றங்கள் அரங்கேறி வருகிறது. சமீபத்தில் பாஜக தேசிய அமைப்புச் செயலாளர் பி எல் சந்தோஷ் தமிழகம் வருகை தந்த நிலையில் பாஜக உள்ளே பல அதிரடி மாற்றங்கள் அரங்கேறி இருக்கிறது. இந்த நிலையில் அண்ணாமலை மீண்டும் மாஸ் என்ட்ரி கொடுப்பதும் உறுதியாக இருக்கிறது. பாஜகவின் ஒரே குறிக்கோள் 2026 சட்டசபை தேர்தலுக்குப் பின்பு கூட்டணி ஆட்சியா அல்லது தனித்து ஆட்சியா என்பது அல்ல, திமுகவை வீழ்த்தவதே ஒரே குறிக்கோள், அதற்காகத்தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தலுக்கு ஒரு வருடத்திற்கு முன்பே அதிமுக பாஜக கூட்டணியை உறுதி செய்தார், அந்த வகையில் தற்பொழுது திமுகவை வீழ்த்த பீகார் ஃபார்முலாவை கையில் எடுத்திருக்கிறார் அமித்ஷா. நடந்து முடிந்த பீகார் சட்டசபை தேர்தலில் மிக பிரம்மாண்ட வெற்றியை பெற்றது பாஜக கூட்டணி, இதற்கு முக்கிய காரணம் சிறு சிறு கட்சிகளை கூட கூட்டணிக்குள் அரவணைத்து பாஜக பீகார் தேர்தலை சந்தித்தது தான். அதே ஃபார்முலாவை தமிழகத்தில் பயன்படுத்தி எந்த ஒரு சிறு கட்சிகள் கூட விடுபட்டு விடக்கூடாது என அனைத்து கட்சிகளையும் கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சியில் இறங்கி இருக்கிறார் அமித்ஷா. அந்த வகையில் டிடிவி தினகரன், திருமாறன் ஜி, ஜான்பாண்டியன் ஆகியோர் கூட்டணியில் ஏற்கனவே இருக்கும் நிலையில் அடுத்து ஒரு சில கட்சிகள் கூட்டணிக்குள் வருவார்கள், பிரதமர் மோடி மார்ச் மாதம் தமிழக வருவதற்கு முன்பு தேசிய ஜனநாயகக் கூட்டணி இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மோடி மற்றும் அமித்ஷா ஆகிய இருவருக்குமே அண்ணாமலை மீது தனி மதிப்பு உண்டு.bஇதற்கு முக்கிய காரணம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு என்ன தமிழகத்தில் 11 சதவீத வாக்கு வங்கியை அண்ணாமலை பெற்றுக் கொடுத்தது தான். இந்த நிலையில் தற்பொழுது அமைப்பு பொதுச்செயலாளர் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் அமைப்பு பொதுச்செயலாளர் நியமிக்கப்படுவது தாமதமாகும் என்றும், தமிழக அமைப்பு பொதுச்செயலாளர்களுக்கான வேலையை தேசிய அமைப்பு செயலாளர் பி எல் சந்தோஷ் தொடர்ந்து கவனிப்பார் என்றும், அவருக்கு கீழ் மூன்று பேர் கண்ட குழு அமைக்கப்படும் என்றும் ,அந்த குழுவில் அண்ணாமலையும் இடம் பெறுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது, இந்த நிலையில் பாஜக தேசிய தலைவராக ஒரு இளைஞரான நிதி நவீன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு துணையாக இளைஞர்களில் இருக்கக்கூடிய இளைஞர்களில் அண்ணாமலை பெயர் அடிபட்டு வருகிறது. அந்த வகையில் கட்சியில் தேசிய அளவில் பொதுச்செயலாளர் பதவி அண்ணாமலைக்கு கொடுப்பதற்கான வாய்ப்பு இருக்கு என்றும், அப்படி இல்லை என்றால் பிரதம மந்திரி துறையில் இருக்கக்கூடிய இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என்றும், அப்படி அண்ணாமலைக்கு பிரதமர் துறைக்கு கீழ் ஒரு இணை அமைச்சர் கொடுக்கப்படும் நிலையில் சிபிஐ அந்த துறையின் அமைச்சரின் கட்டுப்பாட்டிற்கு வரும். அந்த வகையில் திமுக தொடர்பான பல விவரங்கள் சிபி ஐ மூலம் தோண்டி எடுக்க அண்ணாமலை தான் சரியான நபராக இருப்பார் என பிரதமர் மற்றும் அமித்ஷா தேர்வாக கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பாஜகவின் ஒவ்வொரு நகர்வுகளும் திமுகவுக்கு மிக பெரிய கலக்கத்தை கொடுத்து வருகிறது என்கிறது அரசியல் வட்டாரங்கள்.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்று கனவு விதை போட்டவர் போராடுகிறார்.....!!!!
ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு - அறிவிப்பு வெளியீடு .!
பீகார் ஃபார்முலா - அமித்ஷா வியூகம் ! ரீ என்ட்ரி கொடுக்கும் அண்ணாமலை !!
அமைச்சரின் முன்னாள் உதவியாளர் மீது நில மோசடி - குவியும் புகார்கள் ! சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார் ?
மறைவிலும் வாழ்வளித்த 'குட்டி தேவதை'..! 10 மாதம்...! 5 உயிர்...! குவியும் பாராட்டுக்கள்...!