by Vignesh Perumal on | 2026-02-14 01:52 PM
கேரளா திருவனந்தபுரத்தில் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த 10 மாதக் குழந்தை, தனது உடல் உறுப்புகளைத் தானம் செய்ததன் மூலம் ஐந்து பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளது. இதன் மூலம் கேரள மாநில வரலாற்றிலேயே மிக இளம் வயதில் உடல் உறுப்பு தானம் செய்தவர் என்ற பெருமையை அக்குழந்தை பெற்றுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த அலின் ஷெரின் ஆபிரஹாம் என்ற 10 மாதக் குழந்தை, சமீபத்தில் நடந்த ஒரு சாலை விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அக்குழந்தைக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சைப் பலனின்றி குழந்தை மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் முறைப்படி அறிவித்தனர்.
தங்கள் கண் முன்னே தவழ்ந்து விளையாட வேண்டிய குழந்தை விபத்தில் சிக்கி உயிரிழந்த சோகத்திலும், குழந்தையின் பெற்றோர்கள் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்தனர். "எங்கள் குழந்தை மறைந்தாலும், அவன் மூலம் மற்றவர்கள் வாழட்டும்" என்ற நோக்கில் குழந்தையின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய அவர்கள் முன்வந்தனர்.
குழந்தையிடமிருந்து பெறப்பட்ட உறுப்புகள் மூலம் ஐந்து நபர்கள் பயன்பெறவுள்ளனர். குறிப்பாக இதய வால்வு, கல்லீரல், சிறுநீரகம், கண்கள் இந்த உறுப்புகள், உறுப்பு மாற்று சிகிச்சைக்காகக் காத்திருக்கும் நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டு அவர்களுக்குப் புதிய வாழ்வை வழங்கவுள்ளது.
பொதுவாக உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், 10 மாதக் குழந்தையிடமிருந்து உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டது இதுவே முதல்முறை. இதன் மூலம் கேரளாவின் மிக இளம் வயது உடல் உறுப்பு தானம் செய்தவர் என்ற பெருமையை அலின் ஷெரின் ஆபிரஹாம் பெற்றுள்ளது.
துயரமான நேரத்தில் இத்தகைய துணிச்சலான முடிவை எடுத்த குழந்தையின் பெற்றோர்களுக்கும், அறுவை சிகிச்சையைத் திறம்பட நடத்திய மருத்துவக் குழுவினருக்கும் கேரளா முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அக்குழந்தையின் தியாகம் சமூகத்தில் உடல் உறுப்பு தானம் குறித்த ஒரு பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்.
வைகை அணையை தூர்வார வேண்டும் வி ஆர் ராஜன் கோரிக்கை....!!!
கஞ்சா பறிமுதல் எட்டு பேர் கைது....!!!
வங்கியில் கோடிக்கணக்கில் மோசடி - ஒருவர் கைது ! பெண் உட்பட 6 பேருக்கு போலீஸ் வலை வீச்சு. !!
பத்மநாபபுரம் அரண்மனை - பழமை மாறாமல் புதுப்பிக்க கோரிக்கை. !
போதை மாத்திரை விற்பனை - 3 பேர் கைது ! பொறி வைத்து பிடித்த போலீஸ் !!