by Vignesh Perumal on | 2026-02-14 01:24 PM
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய பயங்கர விபத்தில், முத்தலாபுரம் மற்றும் பூசாரிபட்டியைச் சேர்ந்த இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை அடுத்த வத்தலகுண்டு சாலையில் முத்தலாபுரம் பிரிவு அருகே இன்று இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது, அதே சாலையில் வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக மோதியது. மோதிய வேகத்தில் பைக்கில் இருந்த இருவர் தூக்கி வீசப்பட்டு, தலையில் பலத்த காயமடைந்தனர். இதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதாவது, அழகுமலை முத்தலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர், முனியாண்டி பூசாரிபட்டி பகுதியைச் சேர்ந்தவர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும், பட்டிவீரன்பட்டி காவல் நிலைய (பொறுப்பு) ஆய்வாளர் கௌதமன் மற்றும் சார்பு ஆய்வாளர் ராமபாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த விபத்து தொடர்பாக பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கார் ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்.
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதி - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!