by satheesh on | 2026-02-14 08:05 AM
கன்னியாகுமரி :
பூதப்பாண்டி பகுதியில் ரப்பர் தோட்டங்களை சேதப்படுத்தி வந்த வழக்கில் சகாயம் குற்றவாளியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர். ராஜ் என்பவர் பூதப்பாண்டி காவல் நிலையம் அளித்த புகார் மனுவின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதில், சகாயம் மற்றும் வின்சென்ட் ஆகியோர் ரப்பர் தோட்டங்களை சேதப்படுத்தி, தோட்ட முதலாளிகளை மிரட்டி பணம் கேட்டு வந்ததாக குற்றச்சாட்டு சாட்டப்படுகிறது.சகாயம் மீது ஏற்கனவே 18-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் இருப்பதாகவும், பணம் தர மறுத்தால் ரப்பர் தோட்டங்களை தீ வைத்து எரித்து நாசமாக்கி விடுவேன் என மிரட்டியதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இச்சம்பவங்கள் காரணமாக விவசாயிகளும் தோட்ட உரிமையாளர்களும் பெரும் அச்சத்தில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவர் குற்றவாளியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், காவல்துறையினர் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து, சட்டப்படி கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. சமூக அமைதியையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் கொண்டாட்டம் கட்டுரையாளர் ராஜசிம்மன்.....!!!
மேகமலை வன சரணாலயம் மலைவாழ் மக்கள் குறித்து CPM மாநிலச் செயலாளர் சண்முகம் பேட்டி...???
உலக தாய்ப்பால் வார விழா பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைத்தார்.....!!!
மேகமலை மலை கிராம மக்கள் தேனி கலெக்டர் அலுவலகம் முற்றுகை...!!! போராட்டம் தீவிரம்....!!!"
தேனி கலெக்டர் வைத்தியநாதன் ஆய்வு....!!!!!